கம்பராமாயணம் 8827 · யுத்த 23.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இளையவன் இறந்தபின் எனக்கு எவரும் என்? - என் தம்பி இறந்தபின் எனக்கு எவராயிருந்தால் என்ன? அளவறு சீர்த்தி என்? அறன் என்? ஆண்மை என்? - எல்லையற்ற புகழ் எதற்கு? அறம் எதற்கு? ஆண்மை எதற்கு? கிளைஉறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்? - பல்கித் தழுவும் சுற்றத்தார் எதற்கு? அரசாட்சி எதற்கு? நண்பர்கள்தான் எதற்கு? விளைவுதான் என்? மறைவிதி என்? மெய்மைஎன்? - (ஏற்படப் போகும்) விளைவுகள் பற்றி என்ன? வேதவிதிகள் என்ன? மெய் நெறிதான் எதற்கு?
தம்பியை இழந்தபின்னர் புகழ், அறம், ஆண்மை, சுற்றம், அரசு நட்பு, வேதம், மெய்ம்மை என்பனவற்றால் எனக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை - என்று கூறியவாறு. இலக்குவன் மீது இராமன் கொண்டுள்ள அளப்பறும் அன்பை முன்பும் கூறியது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Once my younger brother is dead, what is anyone to me?
- What is boundless fame? What is dharma? What is manhood?
- What are kin in branching clans? What is kingship? What is friendship?
- What are consequences? What is the Veda's law? What is truth?”
What the poem says
In a series of short questions Irāmaṉ rejects everything that has shaped his life: fame, righteousness, courage, family, the throne, friendship, the rule of the Vedas, even truth itself.
None of it means anything to him without Ilakkuvaṉ. The commentary notes that the poet has shown Irāmaṉ's boundless love for his brother before.