கம்பராமாயணம் 8828 · யுத்த 23.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இரக்கமும் பாழ்பட எம்பி ஈறுகண்டு - இரக்கம் எனும் பண்பு கெட்டொழியும்படி என்தம்பியின் இறுதியைக் கண்டபின்பும்; அரக்கரை வென்று நின்று ஆண்மை ஆள்வனேல் - அரக்கரை வென்றுநின்று என்வீரத்தைப் பெரிது படுத்திக் காட்டுவேனாயின்; வஞ்சனேன் மரக்கண் வன்கள்வனே! - வஞ்சகத் தன்மையை உடைய யான் (அம்பினால்) சுரக்கும் தன்மையற்ற மரக்கண்ணை உடைய கள்வனே!; இனி கரக்குமது அல்லது ஓர் கடன் உண்டாகுமோ? - இனி (உலகின் முன் தோன்றாது) ஒளிந்து கொள்வதல்லாது வேறு ஓர் கடமை இருக்குமோ? (இராது).
ஒப்பு:- “மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்து கண்ணோடாதவர்” (குறள் 576) “வன்பராய் முருடொக்குமென் சிந்தைமரக்கண் என் செவி இரும்பினும் வலிது” (திருவாசகம் - செத்திலாப்பது-4)
ஆங்கிலம் · English translationAI
Translation
- “If, with all pity laid waste, having seen my brother's end,
- I should conquer the demons and stand there lording it in my manhood,
- I would be a deceiver, a hard thief with eyes of wood! From now on
- is there any duty left for me but to hide myself away?”
What the poem says
Irāmaṉ says that if he went on to win the war and enjoy the glory after his brother's death, he would be heartless. He would be a hypocrite whose eyes are as dry as wood and shed no tears.
The only fitting thing left for him is to disappear from the world. The commentary compares the "eyes of wood" image with a Tirukkuṟaḷ couplet and a line from the Tiruvācakam.