கம்பராமாயணம் 8829 · யுத்த 23.79

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"தாதையை இழந்தபின் சடாயு வீய்ந்தபின்
காதலின் துணைவரும் முடிய காத்து உழல்
கோது அறு தம்பியும் விளிய கோள் இலன்
சீதையை உவந்துளன் " என்பர் சீரியோர்.

பொருள் · Meaning in Tamil

தாதையை இழந்தபின் சடாயு இற்றபின் - தந்தையை இழந்த பின்னும் அம்முறையினனாகிய சடாயு இறந்த பின்னும்; காதலின் துணைவரும் முடிய - அன்புடைய நண்பரெல்லாம் உயிர் நீங்கப் பெறவும்; காத்து உழல் கோது அறு தம்பியும் விளிய - (இரவு பகலாக) என்னைப் பாதுகாத்து வருத்தமுற்ற குற்றம் இலாத தம்பியான இலக்குவனும் இறந்துபடவும்; “சீதையை உவந்துளான், கோள் இலன்” என்பர் சீரியோர் - (தான் மட்டும் இறவாது) சீதையை விரும்பி இருக்கின்றான், (ஆதலால்) நல்ல கொள்கை இல்லாதவன் இராமன் என்று சீர்மையுடையவர்கள் கூறுவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “‘After losing his father, after Caṭāyu perished,
  2. with his loving companions dead, and his faultless brother,
  3. who wore himself out guarding him, slain too, this man of no principle
  4. still delights in Cītai’: so the noble will say.”

What the poem says

Irāmaṉ imagines how good people would judge him. His father died of grief for him. Caṭāyu, the vulture who was like a second father, died trying to save Cītai. His allies are dead, and his brother, who guarded him day and night, has died as well.

If he lived on and took Cītai back, they would say he had no principles and cared only for his wife.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"tātaiyai iḻantapiṉ caṭāyu iṟṟapiṉ
kātaliṉ tuṇaivarum muṭiya kāttu uḻal
kōtu aṟu tampiyum viḷiya kōḷ ilaṉ
cītaiyai uvantuḷāṉ" eṉpar cīriyōr.