கம்பராமாயணம் 8831 · யுத்த 23.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1படியின்மேல் காதலின் யாதும் பார்க்கலன்
'முடிகுவென் உடன்’என முடியக் கூறலும்
அடி இணை வணங்கிய சாம்பன் 'ஆழியாய்!
நொடிகுவது உளது’என நுவல்வதாயினான்.
பொருள் · Meaning in Tamil
படி இனது ஆதலின் யாதும் பார்க்கிலென் - (என்) நிலைமை இவ்வாறு இருப்பதினால், பின் விளைவுகளைப் பாராமல், 'உடன் முடிகுவன்' என முடியக் கூறலும் - 'உடனே இறப்பேன்' என்று முடிவாகக் (இராமன்) கூறியபோது; அடி இணை வணங்கிய சாம்பன் - (அவ் இராமனுடைய) திருவடிகளை வணங்கிய சாம்பவன்; “ஆழியாய்! நொடிகுவது உளது” என நுவல்வதாயினான் - 'சக்கரப்படையை உடையவனே! யான் சொல்லவேண்டுவது உளது' என்று சொல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Since this is how things stand, I look to nothing more;
- I will die with him,” he said with finality; and at that,
- Cāmpaṉ, bowing at his two feet, began to speak:
- “You who bear the discus, there is something I must tell you.”
What the poem says
Irāmaṉ declares that, with no other way out, he will die at once beside his brother.
Jāmbavān falls at his feet and asks to speak. He addresses Irāmaṉ as the bearer of the discus, a title of Viṣṇu, quietly reminding him of his divine nature.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭi iṉatu ātaliṉ yātum pārkkileṉ
'muṭikuveṉ uṭaṉ’ eṉa muṭiyak kūṟalum
aṭi iṇai vaṇaṅkiya cāmpaṉ 'āḻiyāy!
noṭikuvatu uḷatu’ eṉa nuvalvatāyiṉāṉ.