கம்பராமாயணம் 8832 · யுத்த 23.82

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தெரிவு இல் பெற்றியோய் - எவராலும் தெரிந்துகொள்ள முடியாத (அளத்தற்கரிய) தன்மையே! உன்னை நீ உணர்கிலை - உன்னை நீ உணராமல் இருக்கின்றாய்; அடியனேன் உனை முன்னமே அறிகுவேன் - அடியேன் உன்னை முன்னமே அறிவேன்; அது, மொழிதல் தீது என் எனில் இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம் - அதைக் கூறுதல் நன்றன்று ஏனென்றால் வானவர் எண்ணத்திற்குக் குறைவாகும்; பின்னரே தெரிகுதி! - (உன்தன்மையை நீ பின்னர் நீயே தெரிந்து கொள்வாய்!

“மனவாசகங் கடந்த தொல்லோன் ஆகலின்” தெரிவில் பெற்றியோய் என்றார். “தன் பெருமை தானுணராத தன்மையன்” (திருவா. திருச்சாழல்) ஆகலின் “உன்னை நீ உணர்கிலை” என்றான். சாம்பவன் அவதார ரகசியம் அறிந்தவனாகலின், “உன்னை முன்னமே அறிகுவேன்” எனக் கூறுவதுடன் இப்பொழுது அதனை வெளிப்படுத்துவது தீமைபயக்கும் எனவும், அது தேவர்களின் எண்ணத்திற்கும் குறைவாகும் எனவும் கூறுகின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “You do not know yourself; I, your servant,
  2. have known you from of old; to say it would be wrong,
  3. for why? It would spoil the purpose of the gods;
  4. you will know it later, you whose nature none can fathom.”

What the poem says

Jāmbavān hints at the secret of the incarnation. Irāmaṉ does not know that he is the Supreme Being. Jāmbavān, who is ancient enough to have seen Viṣṇu's earlier deeds, does know.

But to say it openly now would undo the gods' plan, which needs Irāmaṉ to act as a mortal man to destroy Irāvaṇaṉ. Irāmaṉ will learn the truth later. The commentary quotes the Tiruvācakam on the god "who does not know his own greatness."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uṉṉai nī uṇarkilai; aṭiyaṉēṉ uṉai
muṉṉamē aṟikuvēṉ; moḻital tītu atu;
eṉ eṉil imaiyavar eṇṇukku īṉam ām;
piṉṉarē terikuti; terivu il peṟṟiyōy