கம்பராமாயணம் 8833 · யுத்த 23.83

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அம் புயத்து அயன் படை ஆதல் தேறினேன்
உம்பியை உலப்பு அரும் வலத்தை ஒத்தது
வெம்பு போர்க் களத்திடை விழுத்த வென்றியால்;
எம் பெருந் தலைவ! ஈது எண்ணம் உண்மையால்.

பொருள் · Meaning in Tamil

எம் பெருந் தலைவ! - எம்முடைய பெருமை சான்ற தலைவனே! வெம்பு போர்க்களத்திடை - வெம்மை மிக்க போர்க்களத்தின் கண்ணே; உலப்பு அரும் உருவை ஊன்றிட - அழிப்பதற்கரிய உடலில் ஆழப் பதிந்து; உம்பியை வீழ்த்த வென்றியால் - உன் தம்பியாகிய இலக்குவனை வீழ்த்திய வெற்றியினால்; அம்புயத்து அயன்படை ஆதல் தேறினேன் - அது (இந்திரசித்தனால் ஏவப்பட்டது) அழகிய புயங்களுடைய பிரமனுடைய கணை என்பதனை அறிந்தேன். ஈது எண்ணம் உண்மையால் - இந்த என் எண்ணம் உண்மையானதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “I have made sure that it was the weapon of Ayaṉ of the lotus,
  2. from the victory by which it sank into your brother's indestructible body
  3. and felled him on the burning field of battle;
  4. our great leader, this thought of mine is true.”

What the poem says

Jāmbavān explains his reasoning. Nothing could pierce Ilakkuvaṉ's nearly invulnerable body and bring him down except the weapon of Brahmā, the god of the lotus.

So he is certain that this is what Intiracittu used. That matters, because the effects of Brahmā's weapon can be undone.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ampuyattu ayaṉ paṭai ātal tēṟiṉēṉ
umpiyai ulappu arum uruvai ūṉṟiṭa
vempu pōrk kaḷattiṭai viḻutta veṉṟiyāl;
em perun talaiva! ītu eṇṇam uṇmaiyāl.