கம்பராமாயணம் 8834 · யுத்த 23.84

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்னவன் படைக்கலம் அமரர் தானவர்
தன்னையும் விடின் உயிர் குடிக்கும்; தற்பர!
உன்னை ஒன்று இழைக்கிலது ஒழிந்து நீங்கியது;
இன்னமும் அளவை ஒன்று எண்ண வேண்டுமோ?

பொருள் · Meaning in Tamil

அன்னவன் படைக்கலம் விடின் - அந்தப் பிரமனுடைய படைக்கலத்தைவிட்டால்; அமரர் தானவர் தன்னையும் உயிர் குடிக்கும் - தேவர்கள் அசுரர்கள் ஆகிய எவர்களையும் உயிர்குடிக்கும் தன்மையது; தற்பர, உன்னை ஒன்று இழைத்திலது - (அத்தகையபிரமாத்திரம்) எல்லாப் பொருளுக்கும் மேலானவனே! உன்னை ஒன்றுஞ் செய்யாது, ஒழிந்து நீங்கியது - விலகி நீங்கியது; இன்னமும் உவமை ஒன்று எண்ண வேண்டுமோ? - (எனவே) இன்னமும் (இதுபிரமாத்திரந்தான் என்பதற்கும், வலிமைமிக்கது என்பதற்கும்) இந்தப்படைக்கு வேறு உவமை கருதற்குரியதோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “That one's weapon, if it is loosed, drinks the life
  2. even of gods and asuras; yet, Supreme One,
  3. it did nothing at all to you, but fell away and left you;
  4. need we look for any other proof than this?”

What the poem says

Brahmā's weapon kills gods and demons alike, but it passed over Irāmaṉ without touching him.

For Jāmbavān this proves two things: the weapon was indeed Brahmā's, and Irāmaṉ is the Supreme One, beyond its reach. He calls Irāmaṉ "Taṟpara," the one above all things.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉavaṉ paṭaikkalam amarar tāṉavar
taṉṉaiyum viṭiṉ uyir kuṭikkum; taṟpara!
uṉṉai oṉṟu iḻaittilatu oḻintu nīṅkiyatu;
iṉṉamum uvamai oṉṟu eṇṇa vēṇṭumō?