கம்பராமாயணம் 8835 · யுத்த 23.85

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான்
அருந்துயர் முடுக்குறும் அளவு இல் ஆற்றலான்
"மருந்து இறைப் பொழுதினில் கொணர்குவாய்! ” என
பொருந்தினன் வடதிசைக் கடிது போயினான்.

பொருள் · Meaning in Tamil

பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் - பெருவன்மைபடைத்த அனுமன் இப்போது தன்னினைவு எய்தப் பெற்றனன்; அருந்துயர் முடுக்குறும் அளவு இல் ஆற்றலான்- (நமக்கு ஏற்பட்டுள்ள) நீக்குதற்கரிய துன்பத்தைத் தீர்த்து வைக்கக் கூடிய அளவற்ற ஆற்றல்களை உடையவன் அவன்; மருந்து இறைப் பொழுதினில் கொணரும் வாய்மொழி பொருந்தினன் - (ஆதலால் அவன் இறந்தவரை எழுப்புகின்ற) “மருந்தினை இமைப்பொழுதில் கொணர்வாயாக” என்ற என்னுடை மொழியை ஏற்றவனாய்; வடதிசை கடிது போயினான் - வடதிசை நோக்கி விரைந்து போயிருக்கின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Aṉumaṉ of great might has regained his senses here;
  2. he of boundless power, able to drive off this cruel sorrow,
  3. has taken up my word that he should bring the medicine in a moment,
  4. and has gone swiftly to the north.”

What the poem says

Jāmbavān gives Irāmaṉ the good news. Aṉumaṉ survived and has recovered.

He has the strength to end their trouble, and on Jāmbavān's instruction he has already raced north to bring back the healing herbs as fast as he can.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'perun tiṟal aṉumaṉ īṇṭu uṇarvu peṟṟuḷāṉ
arun tuyar muṭukkuṟum aḷavu il āṟṟalāṉ
maruntu iṟaip poḻutiṉil koṇarum vāymoḻi
poruttiṉaṉ vaṭa ticaik kaṭitu pōyiṉāṉ.