கம்பராமாயணம் 8836 · யுத்த 23.86
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பனிவரை கடந்தனன் பருப்பதங்களின்
தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான்
இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும்
துனிவரு துன்பம் நீ துடைத்தி தொல்லையோய்!
பொருள் · Meaning in Tamil
பனிவரை கடந்தனன் - (அனுமன் இப்போது) இமயமலையைக்கடந்து; பருப்பதங்களின் தனிஅரசு அதன்புறம் தவிர்ந்து - மலைகட்கெல்லாம் ஒப்பற்ற அரசாகியமேருமலையின் புறத்தை நீங்கி; சார்ந்துளான் - அம்மருந்துள்ள மலையைச் சார்ந்திருக்கின்றான்; இனி ஒரு கணத்தில்வந்து எய்தும் - இன்னும் ஒரு கணப் போதில் வந்து சேர்ந்துவிடுவான்; தொல்லையோய் - பழமையானவனே! ஈண்டுறும் துனிவருதுன்பம் நீ துறத்தி - இங்கு நீ அடைகின்ற மனம் கலங்குதற்குக் காரணமான பெருந்துன்பத்தை விடுவாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “He has crossed the snowy mountain, has passed beyond the sole king
- of mountains, and has reached the place;
- in a moment more he will be here; the anguished sorrow
- that has come upon you here, cast it off, Ancient One!”
What the poem says
Jāmbavān reckons Aṉumaṉ's progress. By now he must have crossed the Himalaya, gone past Mēru, king of mountains, and reached the medicine mountain.
He will be back in moments, so Irāmaṉ, the Ancient One, should put his grief aside.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'paṉi varai kaṭantaṉaṉ paruppataṅkaḷiṉ
taṉi aracu ataṉpuṟam tavirntu cārntuḷāṉ
iṉi oru kaṇattiṉ vantu eytum; īṇṭuṟum
tuṉi varu tuṉpam nī tuṟatti tollaiyōy!