கம்பராமாயணம் 8837 · யுத்த 23.87

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான்
தான் அலால் சிவன் அலால் நேமி தாங்கிய
கோன் அலால் எனைவரும் உணரும் கோள் இலர்
வேனலான் மேனியாய்! மருந்தை மெய்யுற.

பொருள் · Meaning in Tamil

வேனிலான் மேனியாய் - வசந்தகாலத்திற்கிறைவனாகிய மன்மதன் போன்ற மேனி அழகு உடையவனே! யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் தான் அலால் - யான் அல்லது, என் தந்தையாய் இவ்வுலகைப் படைத்தவனாகிய பிரமன் அல்லது; சிவன் அலால், நேமிதாங்கிய கோன் அலால் - சிவன் அல்லது, சக்கரப்படை தரித்த திருமால் அல்லது; எனைவரும் மருந்தை மெய் உற உணரும் கோள் இலர் - மற்றுள்ள எத்தன்மையோரும் அம்மருந்தை மெய்மையாக உணரும் தன்மையர் அல்லர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Apart from me, apart from him who is my father and gave birth to the world,
  2. apart from Civaṉ, apart from the lord who bears the discus,
  3. there is no one at all who has the power to know that medicine truly,
  4. you whose body is like the lord of spring's!”

What the poem says

Jāmbavān explains that only four know the true nature of these herbs: Jāmbavān himself; Brahmā, creator of the world, whom he calls his father because Jāmbavān was born from him; Śiva; and Viṣṇu, who bears the discus.

He addresses Irāmaṉ as one as handsome as Kāma, the love god whose season is spring.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'yāṉ alāl entaiyāy ulakai īṉṟuḷāṉ
tāṉ alāl civaṉ alāl nēmi tāṅkiya
kōṉ alāl eṉaivarum uṇarum kōḷ ilar
vēṉilāṉ mēṉiyāy! maruntai mey uṟa.