கம்பராமாயணம் 8838 · யுத்த 23.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஆர்கலி கடைந்த நாள் அமிழ்தின் வந்தன;
கார்நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன;
மேருவின் உத்தர குருவின் மேல் உள;
யாரும் உற்று உணர்கிலா அரணம் எய்தின.
பொருள் · Meaning in Tamil
ஆர்கலி கடைந்தநாள் அமிழ்தின் வந்தன - (அம்மருந்துகள்) திருப்பாற் கடலைக் கடைந்த காலத்தில் அமிழ்தினோடு தோன்றியவை; கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன - மேக வண்ணனாகிய திருமாலின் சக்கரப்படையால் பாதுகாக்கப்படுவன; மேருவின் உத்தர குருவின் மேல் உள - மேருவின் வடபால் உள்ள உத்தரகுரு நாட்டிற்கும் அப்பால் உள்ளன; யாரும் மற்று உணர்கிலா அரணம் எய்தின - யாரும் நெருங்கி அறியவியலாத வண்ணம் பாதுகாவல் பொருந்தியன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “They came with the nectar on the day the roaring sea was churned;
- the discus of the cloud-dark lord guards them;
- they lie beyond Uttarakuru, north of Mēru;
- they are set within a fortress no one else can know.”
What the poem says
Jāmbavān tells Irāmaṉ what he earlier told Aṉumaṉ. The herbs rose with the nectar of immortality when the ocean was churned.
They grow beyond Uttarakuru, north of Mēru, guarded by Viṣṇu's discus, so well protected that no one can reach them or even know of them.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ārkali kaṭainta nāḷ amiḻtiṉ vantaṉa;
kār niṟattu aṇṇaltaṉ nēmi kāppaṉa;
mēruviṉ uttarakuruviṉmēl uḷa;
yārum maṟṟu uṇarkilā araṇam eytiṉa.