கம்பராமாயணம் 8842 · யுத்த 23.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1"பொன்மலை மீதுபோய் போக பூமியின்
நல் மருந்து உதவும் " என்று உரைத்த நல்லுரைக்கு
அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்
என்னலும் வடதிசை எழுந்தது ஓங்கு ஒலி.
பொருள் · Meaning in Tamil
“பொன்மலை மீது போய் போக பூமியின் - “பொன் மலையாகிய மேருவின் மேற்சென்று போக பூமிக்கு அப்பால் உள்ள; நல் மருந்து உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு - நல்ல மருந்தை அனுமன் உதவுவான்” என்று நீ சொன்ன நல்லசொல்லுக்கு, அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் என்னலும் - பொருத்தம் இல்லை என்று யான் ஐயுறவு கொள்ளவில்லை” என்று இராமன் சொல்லுதலும்;
ஆங்கிலம் · English translationAI
Translation
- “To your good word, that he will go over the Golden Mountain
- and bring the good medicine from beyond the land of pleasure,
- I do not doubt that it rings true,” he said;
- and as he spoke, a sound rose up there in the sky.
What the poem says
Irāmaṉ tells Jāmbavān that he trusts his words completely. He does not doubt that Aṉumaṉ will cross Mount Mēru and bring the herbs from beyond the northern land of pleasure.
At that moment a great roar is heard in the sky: Aṉumaṉ is returning.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"poṉmalaimītu pōy pōka pūmiyiṉ
nal maruntu utavum" eṉṟu uraitta nal uraikku
aṉvayam illai eṉṟu ayirkkiṉṟēṉ alēṉ
eṉṉalum vicumpiṭai eḻuntatu aṅku oli.