கம்பராமாயணம் 8843 · யுத்த 23.93

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர கார்வரை
இடை இடை பறிந்து விண் ஏற இற்று இடை
தடை இலது உடற்றுறு சண்ட மாருதம்
வடதிசை தோன்றிய மறுக்கம் உற்றதால்.

பொருள் · Meaning in Tamil

கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர - கடல் பொங்கி எழுந்து கரை கடந்து செல்லவும்; கார்வரை இடை இடை பறிந்து விண் ஏற - கரிய மலைகள் நடுநடுவே பறியுண்டு இடையில் முறிந்து விண்மேல் ஏறவும்; தடை இலது உடற்றுறு சண்டமாருதம் - தங்கு தடையில்லாமல் வீசுகின்ற சண்டமாருதம்; வடதிசை தோன்றிய மறுக்கம் வந்ததால் - வடதிசையில் தோன்றியதாலாகிய கலக்கம் உண்டாகியது.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the sea surged up and spread over the land, as dark mountains
  2. were torn up here and there and, broken in the middle, rose into the sky,
  3. a raging gale, unchecked, that fights all in its way,
  4. the tumult arising in the north, came on.

What the poem says

Aṉumaṉ's return is felt before he is seen. A violent storm wind sweeps down from the north.

The sea floods over its shores, and whole mountains are torn loose, snapped and carried up into the sky by the force of his flight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṭal kiḷarntu eḻuntu mēl paṭara kār varai
iṭai iṭai paṟintu viṇ ēṟa iṟṟu iṭai
taṭai ilatu uṭaṟṟuṟu caṇṭamārutam
vaṭa ticai tōṉṟiya maṟukkam vantatāl.