கம்பராமாயணம் 8845 · யுத்த 23.95

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வேர்த் துணர் தூரொடு விசும்பை மீச் செலப்
போர்த்தன மலையொடு மரனும் முன்புபோல்
தூர்த்தன வேலையை; காலின் தோன்றலும்
ஆர்த்தனன் அனையவர் அரந்தை ஆற்றுவான்.

பொருள் · Meaning in Tamil

வேர்த்துள தூரொடு விசும்பை மீச்செலப் போர்த்தன - வேரோடு கூடிய புதரினோடும், வானத்தின் மேல் செல்லுமாறு மூடிக்கொண்டுள்ள; மலையொடுமரனும் முன்பு போல் வேலையைத் தூர்த்தன - மலையோடு மரமும் அணைகட்டிய காலத்தைப் போலக் கடலைத் தூர்த்தன; காலின் தோன்றலும் - காற்றின் மகனான அனுமனும்; அனையவர் அரந்தை ஆற்றுவான் ஆர்த்தனன் - அங்குள்ள சாம்பவன் முதலானோரின் துன்பத்தை (முன்கூட்டியே போக்குதற்காக) ஆரவாரித்தான்.

தூர்- புதர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mountains and trees, which had covered the sky as they rose high
  2. with their rooted thickets, filled up the sea as they had before;
  3. and the noble son of the Wind
  4. gave a great shout, to ease the grief of those there.

What the poem says

The mountains and trees that Aṉumaṉ's wind lifted into the air now fall into the sea and fill it. The poet compares this to the time the monkeys built the causeway to Ilaṅkai by throwing rocks and trees into the ocean.

As he approaches, Aṉumaṉ gives a loud shout, so that Irāmaṉ and the others will know he is back and take heart even before he lands.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vērttuḷa tūroṭu vicumpai mīc celap
pōrttaṉa malaiyoṭu maraṉum muṉpupōl
tūrttaṉa vēlaiyai; kāliṉ tōṉṟalum
ārttaṉaṉ aṉaiyavar arantai āṟṟuvāṉ.