கம்பராமாயணம் 8848 · யுத்த 23.98
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பூதலத்து, அரவொடு மலைந்து போனநாள் - பூவுலகின் கண்ணே ஆதிசேடனுடன் போர் செய்து சென்ற காலத்து; ஓதியவென்றியன், உடற்றும் ஊற்றத்தான் - சிறப்பித்துக் கூறப்படும் வெற்றியை உடையவனும், போர் செய்யும் வலிமையுடையவனுமாகி; ஏதம்இல் இலங்கை அம்கிரி கொடு எய்திய - குற்றமில்லாத இலங்கைக்கு இடமாக உள்ள திரிகூட மலையைப் பறித்துக்கொண்டு தென்திசை எய்திய; தாதையும் ஒத்தனன் தற்கு உவமை இலான் - தன் தந்தையாகிய வாயுதேவனையும் ஒத்து விளங்கினான் - தனக்கு உவமை இல்லாதவனாகிய அனுமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the day he fought with the serpent on the earth and went off,
- the one of famed victory and battling strength who came
- carrying the fair mountain of faultless Ilaṅkai:
- he who has no equal was like that, his own father.
What the poem says
A second comparison. Once Vāyu, the Wind god and Aṉumaṉ's father, wrestled with Ādiśeṣa, the cosmic serpent, over who was stronger. In that contest Vāyu tore off a peak of Mount Mēru and carried it south, where it became Trikūṭa, the mountain on which Ilaṅkai stands.
Aṉumaṉ, who has no equal, now looks just like his father did then, flying with a mountain in his hands.