கம்பராமாயணம் 8849 · யுத்த 23.99

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தோன்றினன் 'என்னும் அச்சொல்லின் முன்னம் வந்து
ஊன்றினன் நிலத்து அடி; கடவுள் ஒங்கல்தான்
வான்தனி நின்றது வஞ்சர் ஊர் வர
ஏன்றிலது ஆதலின்; அனுமன் எய்தினான்.

பொருள் · Meaning in Tamil

“தோன்றினன்” என்னும் அச் சொல்லின் முன்னம் வந்து - (அனுமனது ஆர்ப்பொலி கேட்டு) சாம்பவன், அனுமன் வந்து தோன்றினான் என்று சொல்லிய அச் சொல்லுக்கு முன்பே வந்து; நிலத்து அடி ஊன்றினான் - (அனுமன் நிலத்தில் அடியை ஊன்றினான்; வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆதலின் - வஞ்சக அரக்கரின் ஊர்க்கு வர இசையவில்லை ஆதலால்; கடவுள் ஓங்கல்தான் வான்தனில் நின்றது - தெய்வத்தன்மையுள்ள மருத்துமலை வானில் தனியே நின்றுவிட; அனுமன் எய்தினான் - அனுமன் மட்டும் வந்து நிலத்தை அடைந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the word “He has appeared!” was out, he had come
  2. and planted his foot on the ground; the divine mountain itself
  3. stayed in the sky, since it would not consent to come
  4. to the city of the deceivers; Aṉumaṉ alone arrived.

What the poem says

Jāmbavān has barely begun to say "he's here" when Aṉumaṉ lands. The holy mountain stays hanging in the sky above the battlefield.

The poet explains that it refuses to come down onto the demons' wicked city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tōṉṟiṉaṉ 'eṉṉum ac colliṉ muṉṉam vantu
ūṉṟiṉaṉ nilattu aṭi; kaṭavuḷ oṅkaltāṉ
vāṉtaṉil niṉṟatu vañcar ūr vara
ēṉṟilatu ātaliṉ; aṉumaṉ eytiṉāṉ.