கம்பராமாயணம் 8850 · யுத்த 23.100

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1காற்று வந்து அசைதலும் கடவுள் நாட்டவர்
போற்றிட விருந்து உவந்து இருந்த புண்ணியர்
ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவம் கூடினார்.

பொருள் · Meaning in Tamil

காற்று வந்து அசைத்தலும் - (வானில் நின்ற மருத்து மலையின் காற்று வந்து (தம் உடம்பின் மேல்) வீசுதலும்; கடவுள் நாட்டவர் போற்றினர் விருந்து உவந்திருந்த புண்ணியர் - அமரர் நாட்டவர்கள் போற்றுமாறு அவர்க்கு விருந்தாய் மகிழ்ந்து தங்கியிருந்த வானர வீரர்களாகிய புண்ணியவான்கள்; ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார் - உயர்வும், மிக்கவலிவும் அழகும் பெற்றவராய்; கூற்றினை வென்று தம் உருவும் கூடினார் - யமனை வெற்றி கண்டு தமது பழையவானர உருவத்துடன் இயைந்தனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as the breeze came and stirred them, the virtuous ones
  2. who had been staying gladly as guests of the heavenly land, honoured by its people,
  3. regained their high estate, their great strength and their beauty,
  4. and, conquering Death, came back into their own forms.

What the poem says

The herbs do not even need to be applied. As soon as the breeze blowing off the medicine mountain touches the fallen monkeys, they return to life.

The poet treats them as virtuous heroes who had briefly gone to heaven as honoured guests of the gods. Now they defeat death and return to their bodies, with their strength and beauty restored.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṟṟu vantu acaittalum kaṭavuḷ nāṭṭavar
pōṟṟiṉar viruntu uvantirunta puṇṇiyar
ēṟṟamum peru vali aḻakoṭu eytiṉār
kūṟṟiṉai veṉṟu tam uruvum kūṭiṉār.