கம்பராமாயணம் 8851 · யுத்த 23.101

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரக்கர்தம் யாக்கைகள் அழிவு இல் ஆழியில்
கரக்கல் உற்று ஒழிந்தன ஓழிய கண்டன
மரக் குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன;
குரக்கு இனம் உய்ந்தது கூறல் வேண்டுமோ?

பொருள் · Meaning in Tamil

அரக்கர் தம் ஆக்கைகள் - அரக்கருடைய உடல்கள்; அழிவுஇல் ஆழியில் கரக்கலுற்று ஒழிந்தன ஒழிய - அழிவில்லாத ஆழ்கடலில் (மருத்தனால் எறியப்பட்டு) மறைந்து ஒழிந்தனபோக; கண்டன மரக்குலம் முதலவும் உய்ந்து வாழ்ந்தன - காணப்பட்டனவாகிய (பட்ட) மரக்குலம் முதலிய ஒருயிர்ப் பொருள்களும் உயிர்பெற்று வாழலாயின என்றால்; குரக்கு இனம் உய்ந்தது கூற வேண்டுமோ - (ஐயறிவுயிராகிய) குரங்கினம் உயிர் பெற்றது பற்றிக் கூறவும் வேண்டுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Apart from the demons' bodies, which had been hidden away
  2. in the endless ocean and were gone,
  3. everything in sight, trees and all, revived and lived again;
  4. need I tell how the monkey host came back to life?

What the poem says

The breeze from the herbs brings back everything it touches. Even withered trees and plants on the battlefield come back to life, so of course the monkeys revive.

Only the dead demons stay dead. Irāvaṇaṉ had ordered their bodies thrown into the sea to hide his losses, so the healing wind never reached them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arakkartam ākkaikaḷ aḻivu il āḻiyil
karakkaluṟṟu oḻintaṉa ōḻiya kaṇṭaṉa
marakkulam mutalavum uyntu vāḻntaṉa;
kurakku iṉam uyntatu kūṟa vēṇṭumō?