கம்பராமாயணம் 8852 · யுத்த 23.102

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கழன்ற நெடுங்கணை கரந்த புண்; கடுத்து
அழன்றன குளிர்ந்தன அங்கம்; செங்கண்கள்
சுழன்றன; உலகு எலாம் தொழுதது ஓங்கலை;
குழன்ற பூங் குஞ்சியான் உணர்வும் கூடினான்.

பொருள் · Meaning in Tamil

கழன்றன நெடுங்கணை கரந்த புண் - உடம்பில் தைத்திருந்த நீண்ட அம்புகள்தாமே கழன்று வீழ்ந்தன; அவற்றாலாகிய புண்களெல்லாம் தாமே மறைந்தன; கடுத்து அங்கம் அழன்றில குளிர்ந்தன - வலிமிகுந்திருந்த அங்கங்கள் அழற்சி இன்றிக் குளிர்ந்தன; செங்கண்கள் சுழன்றன - (கோபத்தால்) சிவந்திருந்த கண்கள் சுழலத் தொடங்கின; உலகு எலாம் தொழுவ - உலகனைத்தும் தொழுவனவாயின; தொங்கலின் குழன்ற பூங் குஞ்சியான் உணர்வு கூடினான் - மாலை போன்று சுருண்ட அழகிய மயிர் முடியை உடைய இலக்குவன் தன் உணர்வு வரப்பெற்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The long arrows fell out, the wounds closed; his limbs, which had throbbed,
  2. no longer burned but grew cool; his red eyes
  3. rolled; and the whole world worshipped;
  4. he of the fair curling locks like a garland came back to his senses.

What the poem says

Now Ilakkuvaṉ revives, and the healing powers of the herbs take effect one after another. The arrows drop out of his body, his wounds close, the fever leaves his limbs, and his red eyes begin to move.

The whole world rejoices and worships as the prince with curling hair comes back to consciousness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaḻaṉṟaṉa neṭuṅ kaṇai karanta puṇ; kaṭuttu
aḻaṉṟila kuḷirntaṉa aṅkam; ceṅ kaṇkaḷ
cuḻaṉṟaṉa; ulaku elām toḻuva toṅkaliṉ;
kuḻaṉṟa pūṅ kuñciyāṉ uṇarvu kūṭiṉāṉ.