கம்பராமாயணம் 8853 · யுத்த 23.103

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1யாவரும் எழுந்தனர் ஆர்த்த ஏழ்கடல்
தாவரும் பேரொலி செவியில் சார்தலும்
தேவர்தம் வாழ்த்தொலி கேட்ட செங்கணான்
யோகம் நீங்கினன் என இளவல் ஓங்கினான்.

பொருள் · Meaning in Tamil

யாவரும் எழுந்தனர் - வானரர் யாவரும் உயிர் பெற்று எழுந்தனராய்; ஆர்த்த, ஏழ்கடல் தாவரும் பேர்ஒலி செவியில் சார்தலும் - ஆரவாரித்த ஏழுகடலின் ஒலி போன்ற கெடுதலில்லாதபெரிய ஆரவாரம் தன் செவியில் சேர்ந்தவுடன்; தேவர்கள் வாழ்த்தொலிகேட்ட செங்கணான் - தேவர்களுடைய வாழ்த்தொலியைக் கேட்ட சிவந்த கண்களை உடைய திருமால்; யோகம் நீங்கினான் என இளவல் ஓங்கினான் - யோக நித்திரையிலிருந்து எழுந்தான் போல இலக்குவன் எழுந்து நின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All rose up and shouted; as that great, unfailing roar,
  2. like the seven seas, reached his ears,
  3. like the red-eyed one who, hearing the gods' hymns of praise,
  4. leaves his yogic sleep, the younger brother rose.

What the poem says

Every warrior is back on his feet, and their shout sounds like all seven seas roaring together.

At the noise Ilakkuvaṉ stands up. The poet compares him to Viṣṇu waking from his yogic sleep on the cosmic ocean when the gods sing his praises. In the tradition the poem follows, Ilakkuvaṉ is an incarnation of Ādiśeṣa, the serpent who is Viṣṇu's bed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1yāvarum eḻuntaṉar ārtta ēḻ kaṭal
tāvarum pēr oli ceviyil cārtalum
tēvarkaḷ vāḻttu oli kēṭṭa ceṅ kaṇāṉ
yōkam nīṅkiṉeṉ eṉa iḷaval ōṅkiṉāṉ.