கம்பராமாயணம் 8858 · யுத்த 23.108

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆய காலையின் அமரர் ஆர்த்து எழ
தாயின் அன்பனைத் தழுவினான் தனி
நாயகன் பெருந்துயரம் நாம் அற
தூய காதல்நீர் துளும்பு கண்ணினான்.

பொருள் · Meaning in Tamil

ஆயகாலையின் தனி நாயகன் - அது போழ்து ஒப்பற்ற தலைவனாகிய இராமன்; பெருந்துயரம் நாம் அற - (முன்பிருந்த) பெருந்துயரமும் அச்சமும் ஒழிதலால்; தூயகாதல் நீர் துளங்கு கண்ணினான் - தூய்மையான அன்புக் கண்ணீர்தளும்பும் கண்களை உடையவனாய்; தாயின் அன்பனை அமரர் ஆர்த்தெழத் தழுவினான் - தாய் போன்ற அன்பனாகிய அனுமனைத் தேவர்கள் மகிழ்ச்சியினால் ஆரவாரித்து எழாநிற்கத் தழுவிக் கொண்டான்.

நாம் - அச்சம். இராமனுடைய துயரமும் அச்சமும் அகன்றதால் “தூய காதல் நீர் துளங்கு கண்ணினான்” என்றார். அறம் தழைக்க அனைவரும் உயிர்த்தெழவும், உலகம் உய்யவும் காரணமாயிருந்தமையின் அனுமன் “தாயின் அன்பன்” எனப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, as the immortals rose up shouting,
  2. the peerless Lord embraced him who loves like a mother,
  3. his great sorrow and his fear gone,
  4. his eyes brimming with tears of pure love.

What the poem says

This verse begins a new metre. Irāmaṉ's grief and fear are gone, and his eyes fill with tears of love as he embraces Aṉumaṉ while the gods cheer.

The poet calls Aṉumaṉ one whose love is like a mother's. The commentary explains that, like a mother, he has given everyone life again, so that righteousness can flourish and the world be saved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āya kālaiyiṉ amarar ārttu eḻa
tāyiṉ aṉpaṉait taḻuviṉāṉ taṉi
nāyakaṉ perun tuyaram nām aṟa
tūya kātal nīr tuḷaṅku kaṇṇiṉāṉ.