கம்பராமாயணம் 8860 · யுத்த 23.110

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முன்னின் தோன்றினோர் முறையில் நீங்கலாது - முன் எம் குலத்தில் தோன்றினோரது முறைமையினின்றும் நீங்காமலிருந்து; என்னின் தோன்றிய துயரின் - என்னால் தோன்றிய துயரின்; ஈறுசேர் மன்னின் முன்னம் தோன்றினோம் - இறந்த தசரத மன்னனிடத்தில் முன்னம் தோன்றினோம்; மாண்டுளோம் - (பின்பு பிரமாத்திரத்தால்) இறந்துபட்டோம்; நெறியின் தோன்றினாய் நின்னின் தோன்றினோம் - நன்னெறியில் விளங்குபவனே! (இப்போது) நின்னால் மீண்டும் பிறந்தவர்களானோம்.

முன்னில் தோன்றினோர் முறை - வாய்மை தவறாமை. என்னில் தோன்றிய துயர் - காடு நோக்கித்தான் பிரிந்ததால் ஆயதுயர். ஈறு - இறுதி. ஈறுசேர் மன்னன் - தயரதன். “முன்பு தயரதமன்னனின் மக்களாகப் பிறந்த நாங்கள் மாண்டுவிட்டோம். இப்பொழுது நின்னில் தோன்றியுள்ளோம்” என அனுமனை இராமன் பாராட்டுகின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Before, we were born of the king who, never straying from the way
  2. of those born before him, came to his end through the grief that arose from me;
  3. we died; now we are born of you,
  4. you who were born in the path of right.”

What the poem says

Irāmaṉ pays Aṉumaṉ the highest praise. He and his brothers were first born as sons of King Tacarataṉ. Tacarataṉ kept to his ancestors' rule of never breaking his word, and died of grief when that promise forced Irāmaṉ into exile.

Now the brothers have died and been born again, and this time Aṉumaṉ, who always walks the path of virtue, is the one who has given them life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉṉiṉ tōṉṟiṉōr muṟaiyiṉ nīṅkalātu
eṉṉiṉ tōṉṟiya tuyariṉ īṟu cēr
maṉṉiṉ tōṉṟiṉōm muṉṉam; māṇṭuḷōm
niṉṉiṉ tōṉṟiṉōm neṟiyiṉ tōṉṟiṉāy.