கம்பராமாயணம் 8861 · யுத்த 23.111
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயனே! அழியுங்கால் தரும் உதவி மொழியுங்கால் - 'ஐயனே! எல்லோரும் அழியுங்காலத்தில் நீ தந்த உதவியைச் சொல்லுமிடத்து; தரும் உயிரின் முற்றுமோ? - இப்போது தரப்பட்ட உயிரோடு முற்றுப் பெற்றதாகுமோ (ஆகாது); பழியுங் காத்து அரும் பகையும் காத்து - (நீ தந்த உதவியால்) எமக்கு வரும் பழியையும் வாராமல் காத்து; அரிய எம்பகையும் வலிமிக்கு உலகை அழிக்காமல் காத்து; எமை வழியும் காத்தனை நம் மறையும் காத்தனை - எம்மரபையும் அழியாமல் காத்து நமது வேத நெறியையும் அழியாமல் காப்பாற்றினாய்'
ஐயனே! நீ எமக்கு உயிர்மட்டுமா தந்துளாய்? பழி, பகை, வழி, மறை ஆகிய அனைத்தையுமல்லவா காப்பாற்றியுள்ளாய், என்கின்றான். பழி - சீதையை மீட்காமை, முனிவர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமை. பகை - வலிமைமிகுந்து உலகை அழிக்காமை. வழி - இலக்குவன் இறக்கவே இராமனும், தொடர்ந்து பரதசத்துருக்கர் ஆகியோர் இறக்கச் சூரியகுலம் வழியற்றுப் போதல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Sir, the help you gave when we were perishing,
- if one tries to tell it, does it end with the life you gave?
- You guarded us from disgrace, you guarded us from the hard enemy,
- you guarded our line, and you guarded our Veda.”
What the poem says
Irāmaṉ says that Aṉumaṉ has given much more than life. He saved them from disgrace: failing to rescue Cītai, or breaking the promise to protect the sages. He kept the enemy from growing strong enough to ruin the world.
He also saved their family line, which would have ended if Ilakkuvaṉ's death had led to Irāmaṉ's, and then to the deaths of Paratan and Catturukkaṉ. And he protected the Vedic way of life.