கம்பராமாயணம் 8862 · யுத்த 23.112

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'தாழ்வும் இங்கு இறைப் பொழுது தாழ்ந்ததேல்
வாழி எம்பிமேல் அன்பு மாட்ட வான்
ஏழும் வீயும்; என் பகர்வது? எல்லை நாள்
ஊழி காண நீ உதவினாய் அரோ!

பொருள் · Meaning in Tamil

தாழ்வில் இங்கு இறைப்பொழுது தக்கதே - எனக்கு நேர்ந்த இத்தாழ்வும் இவ்விடத்தில் இன்னும் சிறிது போழ்து (நீக்கப்படாமல்) தாழ்ந்திருக்குமாயின்; வாழி எம்பிமேல் அன்பு மாட்ட - நெடிது வாழ்வதற்குரிய என் தம்பி மேல் எனக்கிருக்கும் அன்பானது அழிக்க; வான் ஏழும் வீயும்; என் பகர்வது - மேலேழுலகங்களும் அழிந்திருக்கும் என்ன சொல்வது? ஊழி எல்லை நாள் காணும் நீ - ஊழியின் இறுதி நாளையும் காணப்போகின்ற நீ; உதவினாய் - அவ்வுலகங்கள் அழியாமலிருக்க உதவி செய்தாய்.

அரோ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Had there been the least delay here in this low state,
  2. my love for my brother, may he live long, would have destroyed
  3. the seven heavens; what can I say? You, who will see
  4. the last day of the age, have come to our aid!”

What the poem says

Irāmaṉ admits how close the disaster came. If Aṉumaṉ had been even a moment later, Irāmaṉ's grief for his brother would have driven him to destroy all seven upper worlds.

Aṉumaṉ, who is destined to live until the end of this cosmic age, has saved the universe itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tāḻvil iṅku iṟaippoḻutu takkatē
vāḻi empimēl aṉpu māṭṭa vāṉ
ēḻum vīyum; eṉ pakarvatu? ellai nāḷ
ūḻi kāṇum nī utaviṉāy arō!