கம்பராமாயணம் 8865 · யுத்த 23.115

Section யுத்த காண்டம் / 23. மருத்து மலைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உய்த்த மா மருந்து உதவ ஒன்னலார்
பொய்த்த சிந்தையார் இறுதல் பொய்க்குமால்
மொய்த்த குன்றை அம் மூல ஊழிவாய்
வைத்து மீடியால் வரம்பு இல் ஆற்றலாய்.

பொருள் · Meaning in Tamil

வரம்பு இல் ஆற்றலாய்! - எல்லையற்ற ஆற்றலை உடைய அனுமனே; உய்த்தமாமருந்து உதவ - நீ கொண்டு வந்த சிறந்த மருந்து உதவுவதால்; பொய்த்த சிந்தையர் ஒன்னலார் இறுதி பொய்க்குமால் - பொய் மனத்தவராகிய பகைவர் இறத்தல் பொய்த்துவிடும். (இறந்த அரக்கர் மீண்டும் உயிர் பெறுவர் என்றபடி); மொய்த்த குன்றை அம்மூல ஊழிவாய் வைத்து மீடியால் - (ஆதலால்) மருந்துகள் நெருங்கி உள்ள இம்மலையினை அந்தப் பழைய இடத்தில் வைத்து விட்டுத் திரும்புவாயாக.

என்று சாம்பவன் இயம்ப என அடுத்த செய்யுளில் முடியும். மீள்தி என்பது மீடி எனத் (ளகரத்தோடு தகரத்திற்கு மயக்கவிதி இன்மையால்) திரிந்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If the great medicine you brought should help them, the death
  2. of the foes of false hearts would come to nothing;
  3. so take this crowded mountain back to its ancient place,
  4. set it there and return, you of boundless strength.”

What the poem says

Jāmbavān points out a danger. If the mountain stays, its healing wind might reach the fallen demons and bring them back to life too, undoing all their victories.

So he asks Aṉumaṉ to carry it back to where it came from at once. The sentence continues into the next verse. The commentary also explains the unusual verb form "mīṭi," meaning "return."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uytta mā maruntu utava oṉṉalār
poytta cintaiyār iṟuti poykkumāl
moytta kuṉṟai am mūla ūḻivāy
vaittu mīṭiyāl varampu il āṟṟalāy.