கம்பராமாயணம் 8866 · யுத்த 23.116
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்று சாம்பவன் இயம்ப ஈது அரோ
நன்று சால! என்று உவந்து ஒர்நாழிகை
சென்று மீள்வென் என்று எழுந்து தெய்வமாக்
குன்று தாங்கி அக் குரிசில் போயினான்.
பொருள் · Meaning in Tamil
என்று சாம்பவன் ஆண்டு இயம்ப - என்று சாம்பவன் அங்கு சொல்ல; ஈது அரோ சால நன்று என்று உவந்து - “இது மிகவும் நல்லது” என்று மகிழ்ந்து; “ஒர் நாழிகைச் சென்று மீள்வென்” என்று எழுந்து - “ஒர் நாழிகையிலே சென்று திரும்புவேன்” என்று எழுந்து; தெய்வமாக் குன்று தாங்கி அக்குரிசில் போயினான் - தெய்வத்தன்மையுடைய பெரிய மருத்துமலையைத் தாங்கிக் கொண்டு அந்த அனுமன் போயினான்.
அரோ - அசை. ஈது சால நன்று என இயையும். குரிசில் - ஆண்மகன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When Cāmpaṉ said this there, “This is very good indeed!”
- said he, rejoicing; “I will go and come back within a nāḻikai,”
- and rising, bearing the great divine mountain,
- that noble hero went away.
What the poem says
Aṉumaṉ gladly agrees. He promises to return within a nāḻikai, a unit of about twenty-four minutes.
Lifting the sacred mountain again, the hero sets off. This verse ends the canto of the Medicine Mountain.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu cāmpaṉ āṇṭu iyampa ītu arō
naṉṟu cāla! eṉṟu uvantu or nāḻikaic
ceṉṟu mīḷveṉ eṉṟu eḻuntu teyva māk
kuṉṟu tāṅki ak kuricil pōyiṉāṉ.