கம்பராமாயணம் 8868 · யுத்த 24.2

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரம்பையர், விஞ்சை மாதர் அரக்கியர் அவுணர் மாதர்- தேவமாதரும், வித்தியாதரமகளிரும், அரக்கியரும், அசுரப் பெண்டிரும்; குரும்பை அம் கொங்கை நாகர்கோதையர் இயக்கர் - குரும்பை போன்ற அழகிய தனங்களை உடைய நாககன்னியரும், இயக்க மகளிரும்; கோது இல் கரும்பினும் இனிய சொல்லார், சித்தர்தம் கன்னிமார்கள் - கோது நீக்கிய கரும்பினும்இனிய சொல்லை உடையவர்களாகிய சித்தர் பெண்களும் ஆகிய; வரம்பு அறு சும்மையோர்கள் மயில் குலம் மருள வந்தார் - எல்லையற்ற கூட்டத்தினர் மயிற்குழாங்களும் மருட்சியுறுமாறு வந்தார்கள்.

குரும்பை - மகளிர்தனத்திற்குவமை, “குவவின கொங்கை குரும்பை” (திருக்கோவை - 108) கோது இல் கரும்பு - கோது - சக்கை. “கரும்பூர்ந்த சாறுபோற் சாலவும் பின்னுதவி, மற்றதன் கோது போற் போகும் உடம்பு” (நாலடி - 34) கரும்பினும் இனிய சொல்லார்; “கன்னி நடக்கும் நடை கற்றாள் கரும்பு கசக்கும் மொழி பெற்றாள்” (பிரபு -உற்பத்தி - 57)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Heavenly nymphs, vidyādhara women, demonesses, asura women,
  2. nāga maidens with fair breasts like young coconuts, yakṣa women,
  3. the maidens of the siddhas with speech sweeter than pithless cane,
  4. came in throngs beyond number, so that even flocks of peacocks were bewildered.

What the poem says

Women of every race of beings come to Irāvaṇaṉ's revel: apsaras, vidyādharīs, demonesses, asura women, serpent maidens, yakṣīs and the daughters of the siddhas. There are so many, and they are so graceful, that peacocks feel outdone.

The commentary explains the conventional images: breasts compared to tender coconuts, and voices sweeter than sugarcane with the fibre removed. It cites parallels from the Tirukkōvaiyār, the Nālaṭiyār and the Pirapuliṅka Līlai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1arampaiyar, viñcai mātar, arakkiyar, avuṇar mātar
kurumpai am koṅkai nākar kōtaiyar, iyakkar kōtu il
karumpiṉum iṉiya collār, cittartam kaṉṉimārkaḷ,
varampu aṟu cummaiyōrkaḷ, mayil kulam maruḷa vantār.