கம்பராமாயணம் 8869 · யுத்த 24.3

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மேனகை விசய வாட்கண் திலோத்தமை அரம்பை - மேனகை, வெற்றி பெற்ற வாளைப் போன்ற கண்ணையுடைய திலோத்தமை, அரம்பை; மெல்லென் தேன் நகு மழலை இன்சொல் உருப்பசி - மென்மையாக ஒலிக்கின்ற, தேனையும் பழித்துச் சிரிப்பதற்குரிய, மழலையாகிய இனிய சொல்லினை உடைய ஊர்வசி; முதலாம் வானக தெய்வமகளிர் - முதலாயவானுலகத்துத் தெய்வமகளிர்; ஆனகம், முரசம், சங்கம், முருட்டொடும் இரட்ட - படகமும் முரசமும் சங்கும் முருடு என்னும் வாத்தியத்தோடு முழங்க; சில் அரிச் சதங்கை பம்ப ஆடி வந்தார் - தம் காலில் அணிந்த சிலவாகிய பரலை உடைய சதங்கைகள் ஒலிக்க ஆடிக்கொண்டே வந்தார்கள்.

ஆனகம் - படகம், ஒரு வகை வாத்தியம். முருடு - மத்தளம். “முரசியம்பின் முருடதிர்ந்தன” (சிலம்-1-40) என்றவிடத்து முருடு மத்தளமெனும் குறிப்புரை காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Mēṉakai, Tilōttamai with eyes like conquering swords, Arampai,
  2. Uruppaci, whose soft, lisping sweet speech mocks honey,
  3. and the other divine women of heaven came
  4. dancing, their few-pebbled anklets ringing, as drums, kettledrums, conches and tabors thundered.

What the poem says

The most famous apsaras come: Menakā, Tilottamā with her sword-sharp eyes, Rambhā, and Urvaśī, whose soft childlike voice is sweeter than honey.

They come in dancing, their anklet bells jingling, to the beat of drums, conches and the muruṭu, a kind of tabor. The commentary explains these instrument names with a reference to the Cilappatikāram.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mēṉakai, vicaya vāṭkaṇ tilōttamai, arampai, melleṉ
tēṉ naku maḻalai iṉ col uruppaci, mutalām teyva
vāṉaka makaḷir vantār cil aric cataṅkai pampa,
āṉakam, muracam, caṅkam, muruṭṭoṭum iraṭṭa, āṭi.