கம்பராமாயணம் 8870 · யுத்த 24.4

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தோடு உண்ட சுருளும், தூங்கும், குழைகளும், சுருளில் தோன்றும்
ஏடு உண்ட பசும்பொன் பூவும், திலகமும், இலவச் செவ்வாய்
மூடுண்ட முறுவல் முத்தும், முள்ளுண்ட முளரிச் செங்கண்,
காடு உண்டு புகுந்தது என்னக் கலந்தது கறை வெண் திங்கள்

பொருள் · Meaning in Tamil

குழைகளும் - பனந்தோட்டின் தன்மை பொருந்திய காதணியாகிய பொற்சுருளும், தொங்குகின்ற குழைகளும்; சுருளின் தோய்ந்த ஏடுஉண்ட பசும் பொன் பூவும் திலகமும் - (ஐம்பாலில் ஒன்றாகிய) சுருள் என்ற முடிவகையில் அமைந்த இதழ் பொருந்திய பசும் பொன்னாலியன்ற பூவும், திலகமும்; இலவச் செவ்வாய் மூடுண்ட முறுவல் முத்தும் - இலவம் பூப்போன்ற சிவந்த வாயால் மூடுண்டு கிடக்கின்ற பற்களாகிய முத்தும்; முள்ளுண்ட முளரிச் செங்கண் காடுஉண்டு புகுந்தது என்ன - முட்கள் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற சிவந்தகண்ணும் ஆகியவற்றைக் கொண்ட (தனக்குப் பகையான முளரிக்காடு தன்னை மறைக்கும் வண்ணம்) காடு புகுந்துள்ளது என்ற காரணத்தால்; கறைவெண்திங்கள் முனிந்தது - களங்கத்துடன் கூடிய வெண்ணிறமான சந்திரன் வெகுண்டது.

தோடு உண்ட சுருள் - பனந்தோட்டின் தன்மை பொருந்திய காதணி. சுருளில் தோய்ந்தபூ - ஐம்பால் முடிவகையில் ஒன்றான சுருளில் அமைந்த பூ.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Golden ear-coils shaped like palm-leaf rolls, swinging ear-drops,
  2. flowers of fresh gold with petals set in their coiled hair, the tilaka mark,
  3. the pearls of smiles hidden in mouths red as silk-cotton flowers, red eyes like thorny-stemmed lotuses:
  4. the spotted white moon grew angry, as if a whole forest had come in to swallow it.

What the poem says

The poet lists the dancers' ornaments and features: ear-coils, dangling earrings, gold flowers in their hair, the tilaka on the forehead, pearly teeth behind red lips, and eyes like red lotuses.

The moon is traditionally the enemy of the lotus, which closes at night. Seeing so many lotus-like eyes, it is furious, as if a whole forest of its enemies had come in to overwhelm it. The commentary explains the specific ear ornament and hairstyle named.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṭu uṇṭa curuḷum, tūṅkum, kuḻaikaḷum, curuḷil tōynta
ēṭu uṇṭa pacum poṉ pūvum, tilakamum, ilavac cev vāy
mūṭuṇṭa muṟuval muttum, muḷḷuṇṭa muḷaric ceṅkaṇ,
kāṭu uṇṭu pukuntatu eṉṉa muṉintatu kaṟai veṇ tiṅkaḷ