கம்பராமாயணம் 8871 · யுத்த 24.5

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முளைக் கொழுங் கதிரின் கற்றை முறுவல் வெண்நிலவும் - தோன்றுகின்ற செழுமையான ஒளித்திரளைக் கொண்ட (பெண்களின் புன்சிரிப்பின் வெண்ணிறமான நிலவும்; மூரி ஒளிப்பிழம்பு ஒழுகும் பூணின் உமிழ் இளவெயிலும் - பெரிய ஒளிப்பிழம்பை வெளிப்படுத்துகின்ற அணிகலன்கள் வீசுகின்ற இளவெயிலும்; ஒண் பொன் விளக்கையும் விளக்கும் மேனி மிளிர்கதிர்ப் பரப்பும் வீச- ஒளிவாய்ந்த பொன்னைப் போன்று, விளக்கையும் விளக்குகின்ற அவர்தம் மேனியினது விளங்குகின்ற ஒளிக்கதிர்ப் பரப்பும் வீசுதலால்; வளைத்த பேர் இருளும் கண்டோர் அறிவு என, மருளும் மாதோ - உலகத்தையே வளைத்துக் கொண்டிருந்த பெரிய இரவு இருளும், அப்பெண்களைக் கண்ட ஆடவர் அறிவு போல் மருண்டு நிலை கெடுவதாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The white moonlight of their smiles, a mass of rich new-sprung rays,
  2. the young sunlight poured out by ornaments streaming with great masses of light,
  3. and the spreading rays shining from bodies that make even bright gold lamps look brighter,
  4. all blazing out, the great darkness that ringed the world grew bewildered, like the wits of those who saw them.

What the poem says

The women give off so much light that the night itself loses its hold. Their smiles shine like moonlight, their jewels like the early sun, and their bodies glow brighter than golden lamps.

The darkness that covered the world is thrown into confusion, just as the minds of the men who watch them are.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muḷaik koḻuṅ katiriṉ kaṟṟai muṟuval veṇ nilavum, mūri
oḷip piḻampu oḻukum pūṇiṉ umiḻ iḷa veyilum, oṇ poṉ
viḷakkaiyum viḷakkum mēṉi miḷir katirp parappum, vīca,
vaḷaitta pēr iruḷum kaṇṭōr aṟivu eṉa, maruḷum mātō.