கம்பராமாயணம் 8872 · யுத்த 24.6

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நல்பெருங்கல்விச் செல்வம் நவைஅறு நெறியை நண்ணி - நல்லதாகிய பெரிய கல்விச் செல்வத்தால் குற்றமற்றவழியைப் பொருந்தி; முன்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றி - முற்காலத்து அந்நெறியின் பயனை உணர்ந்த தூயோர்தம் உபதேச மொழியோடு பழகி முதிர்ச்சியுற்று; பின்பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால் வஞ்சன் செய்த - பின்னால் அந்த உபதேச மொழியினால் உளதாம்பயனை (உணரவேண்டி இருக்க, அதனை) உணர்தல் இல்லாத பேதைபால் வஞ்சகன் ஒருவன் செய்த; கற்பனை என்ன ஓடிக் கலந்தது கள்ளின் வேகம் - கற்பனை, அப்பேதையின் உள்ளத்தில் விரைந்த நம்பப்பட்டு பரவுவது போலக் கள்ளின் வேகம் மகளிர் கூட்டத்தில் விரைந்து பரவியது.

நூலறிவோடு கேள்வி ஞானமும் எய்தி அதன் பயனை உணராதாரைப் பேதை என்றார். “ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையாரில்” (குறள்-834) என்பது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the fabrication a deceiver works upon a fool who, having reached
  2. the faultless path through the wealth of great and good learning,
  3. and having grown ripe in the words of the pure who knew its fruit of old,
  4. still cannot grasp its fruit thereafter: so the force of the toddy ran through them and mingled.

What the poem says

The drink takes hold of the women quickly. The poet compares this to a con man's lie working on a learned fool.

Such a man has studied a great deal and heard the teachings of the wise, but never understood what they were for. So a deceiver's tale spreads through his mind at once. The commentary cites the Tirukkuṟaḷ couplet that calls one who learns and teaches but cannot govern himself the greatest of fools.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nal peruṅ kalvic celvam navai aṟu neṟiyai naṇṇi
muṉ payaṉ uṇarnta tūyōr moḻiyoṭum paḻaki, muṟṟi,
piṉ payaṉ uṇartal tēṟṟāp pētaipāl, vañcaṉ ceyta
kaṟpaṉai eṉṉa ōṭik kalantatu, kaḷḷiṉ vēkam.