கம்பராமாயணம் 8875 · யுத்த 24.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வேத்தவை - வேந்தனாகிய இராவணனின் அவையில் உள்ளோர்; “கீழ் உளோர்கள் கீழ்மையே விளைத்தார் - கீழ் உள்ளவர்கள் கீழ்மையே செய்தார்கள்; மேலோர் சீர்த்தவர் செய்யத்தக்க கருமமே செய்தார்” என்ன - மேலுள்ளவர்கள் சிறந்தவர் செய்யத்தக்க நற்செயலையே செய்தார்கள் என்று புகழுமாறு; மணிகோத்த மேகலையினோடும் துகில் குறங்கைக் கூட - மணிகள் கோத்துள்ள மேகலையினோடு இடையில் அணிந்துள்ள துகில் அவிழ்ந்து அற்றங்காட்டித் துடையை அடைய; அத்தன்மை கண்டு கூந்தற் கற்றை அற்றம் காத்தன - அத்தன்மை கண்டு (தலை மேலுள்ள) கூந்தல் திரள் அவிழ்ந்து வீழ்ந்து அவர் அற்றத்தை மறைத்துக் காத்தன.
மேற்பாடலின் விளக்கமாக இப்பாடல் அமைகின்றது. “அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை தான் குற்றமே கூறிவிடும்” (குறள்-980) என்ற குறள் கவியினால் பொன்னே போல் போற்றப்படுவது காண்க. அற்றம் - குறி. மேலே இருக்கும் கூந்தலை மேலோர்க்கும் கீழே அணியப் பெற்ற துகிலைக் கீழோர்க்கும் கூறிய பொருத்தம் காண்க. இயல்பாகவே தம்மோடிருக்கும் கூந்தல் போல் ஒட்டி உறவாவார் உதவியும், இடையிடையே உடுத்துக் களையும் துகில் போன்று பழகிப்பிரிவார்தம் செய்கையும் இத்தன்மைத்தென வாழ்வியல் கூறியவாறு, அரிய அழகிய கற்பனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As their silks slid down with their strung girdles to their jewelled thighs,
- the masses of their hair covered their nakedness; seeing that,
- the royal court said, “Those below did only what is base; those above
- did the deed that befits the noble.”
What the poem says
The poet makes a moral point out of the drunken scene. The garments worn low on the body fall away and expose the women. Their hair, which is on top, falls down and covers them.
The courtiers remark that the "low" things acted basely and the "high" things nobly. The commentary links this to the Tirukkuṟaḷ teaching that the great hide others' shame while the small expose it. It also notes the picture of true friends, who stay with us like our hair, and false ones, who are put on and taken off like clothing.