கம்பராமாயணம் 8877 · யுத்த 24.11

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்
சங்கை இல் பெரும்பண் உற்ற திறம் துறை திறம்பத் தள்ளி,
சிங்கல் இல் அமிழ்தினோடும் புளி அளாம் தேறல் என்ன,
வெங் குரல் எடுத்த பாடல் விளித்தனர், மயக்கம் வீங்க.

பொருள் · Meaning in Tamil

வங்கியம் வகுத்த கானம் வயங்கிய மழலை வாயர்- புல்லாங்குழல் வழங்கும் இன்னிசை தன்னிடம் விளங்குகின்ற மழலைச் சொல்லைப் பேசும் வாயினை உடைய மகளிர்; மயக்கம் வீங்க- மயக்கம் ஏற்பட்டதனால்; சங்கையில் பெரும்பாண் உற்ற நிறத்துறை நிரம்பித்தள்ள - குற்றமற்ற பெரும் பாணர்கள் கண்டறிந்த விளக்கமானதுறை மிக்கு மாறுபட்டுப்போக; சிங்கல் இல் அமுதினோடும் புளி அளாம் தேறல் என்ன - சுவை குன்றாத இனிய அமிழ்தத்தோடு புளிப்புச் சுவை விரவிய கள்ளினைக் கலந்தாற்போல; வெங்குரல் எடுத்தபாடல் விளித்தனர் - கடுங்குரல் எடுத்துப்பாடும் பாடலைப் பாடினர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those with lisping mouths in which the music shaped by the flute shone,
  2. overflowing and straying from the clear modes the faultless great bards had set,
  3. like sour toddy mixed with undiminished nectar,
  4. cried out songs raised in harsh voices, as their stupor swelled.

What the poem says

Women whose voices are usually as sweet as the flute now sing harshly as the drink takes over. They wander away from the modes the master musicians laid down.

The poet compares the result to nectar spoiled by mixing in sour toddy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṅkiyam vakutta kāṉam vayaṅkiya maḻalai vāyar
caṅkai il perum pāṇ uṟṟa niṟattuṟai nirampit taḷḷi,
ciṅkal il amutiṉōṭum puḷi aḷām tēṟal eṉṉa,
veṅ kural eṭutta pāṭal viḷittaṉar, mayakkam vīṅka.