கம்பராமாயணம் 8878 · யுத்த 24.12

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏனைய பிறவும் கண்டார்க்கு இந்திர சாலம் என்ன,
தான் அவை உருவில் தோன்றும் பாவனைத் தகைமை சான்ற
மான் அமர் நோக்கின் நல்லார், மைந்தரைக் காட்டி, வாயால்
ஆனையை விளம்பி தேரை அபிநயத்து இயற்றி உற்றார்.

பொருள் · Meaning in Tamil

கண்டார்க்கு இந்திர சாலம் என்ன - (தம் அபிநயத்தைக்) கண்டோர்க்கு இந்திர சாலவித்தை போலத்தோன்றும்படி; ஏனைய பிறவும் தான் அவை உருவில் தோன்றும் - தாமல்லாத பிற உயிர்களாகிய அவையும் தம் உருவில் தோன்றுமாறு; பாவனைத் தன்மை சான்றோர் - நடிக்கும் பாவனைத் தன்மை மிக்கோராகிய நாடக மகளிர்; மான் அமர் நோக்கினாரை மைந்தரைக்காட்டி - மான் போன்ற கண்ணினை உடைய பெண்டிரையும் ஆடவரையுங் காட்டி, (சைகையால் அவர்களைப் போல் அபிநயிக்கப் போவதாகக் குறித்து); வாயால் ஆனையை விளம்பி தேரை அபிநயித்து இயற்றி உற்றார் - (அதைமறந்து) வாயினால் ஆனையைக் காட்டப் போவதாகக் கூறிவிட்டு (அதையும் மறந்து) அபிநயிக்கும்போது தேரை அபிநயித்துக் காட்டினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those skilled in mime, who could make other beings appear in their own form
  2. so that it looked like conjuring to those who watched,
  3. pointed to the doe-eyed women and to the men, named an elephant
  4. with their mouths, and then set about acting out a chariot.

What the poem says

The dancers are expert mimes who can take on the look of any creature, so well that it seems like magic.

Now they are too drunk to keep track. One signals that she will imitate a woman or a man, announces aloud that she will act an elephant, and then performs a chariot instead.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṉaiya piṟavum kaṇṭārkku intiracālam eṉṉa,
tāṉ avai uruvil tōṉṟum pāvaṉait takaimai cāṉṟōr
māṉ avar nōkkiṉārai, maintaraik kāṭṭi, vāyāl
āṉaiyai viḷampi tērai apinayattu iyaṟṟi uṟṟār.