கம்பராமாயணம் 8880 · யுத்த 24.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“உள்ளத்து உள்ளது அயிர்ப்பினில் அறிதிர்” என்றே - “எம் உள்ளத்தில் உள்ள கருத்து (புணர்ச்சி விருப்பமே என்பது) தெளிவாகவே தெரிந்து கொள்ளுங்கள்” என்று; உயிர்ப்புறத்து உற்றதன்மை உணர்த்தினார் - தம் உடம்பில் பொருந்திய செய்கையால் அப்பெண்கள் உணர்த்தினார்கள்; அது களியாட்டம் ஆக - அக்குறிப்பு களியாட்டமாக வெளிப்பட; செயிர்ப்பு அறு தெய்வச் சிந்தைத் திருமறை முனிவர்க்கேயும் - காமவெகுளி மயக்கங்களின் நீங்கிய சிந்தையரான தெய்வத் தன்மை பொருந்திய சிறந்த வேதமுணர்ந்த முனிவர்க்கும், மயிர்ப்புறம் தோறும் வந்து காம வாரி பொடித்தது - மயிர்க்கால் தோறும் காம உணர்ச்சியாகிய வெள்ளம் தோன்றியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They showed by the state of their bodies, as if to say,
- “Make out clearly what is in our hearts”; and as this became the revel,
- even in sages of the holy Veda, with divine minds free of fault,
- a flood of desire welled up at the root of every hair.
What the poem says
The women's bodies now openly show their desire, as if inviting the men to read their hearts.
The display is so powerful that even sages versed in the Vedas, whose minds are free of lust, anger and delusion, feel desire rising in every pore.