கம்பராமாயணம் 8881 · யுத்த 24.15

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மாப் பிறழ் நோக்கினார்தம் மணிநெடுங் குவளை வாட்கண்
சேப்புற, அரத்தச் செவ் வாய்ச் செங் குழை வெண்மை சேர,
காப்புறு படைக்கைக் கள்ள நிருதர்க்கு ஓர் இறுதி காட்டி,
பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர்தன்மை போன்ற.

பொருள் · Meaning in Tamil

மாப்பிறழ் நோக்கினார்தம் மணி நெடுங்குவளைவாட்கண் - வண்டு பிறழ்வது போன்ற நோக்கத்தை உடைய கள்ளுண்ட பெண்டிர்தம்கரிய நீண்ட குவளை மலர் போன்ற ஒளி பொருந்திய கண்கள்; சேப்புற அரத்தச் செவ்வாய்ச் செங்கிடை வெண்மை சேர - சிவக்கப்பெற்ற தன்மையும் செங்கழு நீர் மலர் போன்ற சிவந்த வாயாகிய செங்கிடை வெண்ணிறம் சேரப் பெற்ற தன்மையும்; கைப்படை காப்புஉறு கள்வநிருதர்க்கு ஓர் இறுதி காட்டி- (அறத்தையன்றி) தம்கையகத்துள்ள படைக்கலன்களையே காவலாகக் கொண்ட வஞ்சகராகிய அரக்கர்க்கு நேரவிருக்கின்ற ஓரழிவினை முன்னர்த் தெரிவித்து; பூப்பிறழ்ந்து உருவம் வேறாய்ப் பொலிந்தது ஓர்தன்மை போன்ற - மலர்கள் வேறுபட்டு வண்ணம் வேறாக விளங்கியதோர் தன்மை போன்று தோன்றின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The long dark-lily, sword-bright eyes of those whose glances dart
  2. turned red, and the red cenkiṭai of their blood-red mouths turned white:
  3. it was as if flowers had changed and their forms shone with other colours,
  4. foretelling an end for the thieving demons who trust in the weapons guarding them.

What the poem says

Under the drink, the women's colours reverse. Their dark lily-like eyes turn red, and their lips, red as the ceṅkiṭai flower, go pale.

The poet reads this as an omen. When flowers change colour unnaturally, ruin is coming, and here it foretells the destruction of the demons, who rely on their weapons rather than on righteousness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māp piṟaḻ nōkkiṉārtam maṇi neṭuṅ kuvaḷai vāṭ kaṇ
cēppuṟa, arattac cev vāyc ceṅ kiṭai veṇmai cēra,
kāppu uṟu paṭaik kaik kaḷva nirutarkku ōr iṟuti kāṭṭi,
pūp piṟaḻntu uruvam vēṟāyp polintatu ōr taṉmai pōṉṟa.