கம்பராமாயணம் 8883 · யுத்த 24.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முத்து அன்மை மொழியல் ஆகா முகிழ் இளமுறுவல் நல்லார் - முத்து அல்ல எனக்கூறமுடியாத (முத்துக்களே எனத்தகும்) பற்கள் தோன்ற முகிழ்க்கின்ற புன்முறுவலையுடைய பெண்கள்; இத்தன்மை எய்த நோக்கி அரசு வீற்றிருந்த எல்லை - கள் மயக்கத்தால் இத்தன்மை அடைதலை விருப்பத்தோடு நோக்கிக் கொண்டு (இராவணன்) அரசு வீற்றிருந்தபோது; அத்தன்மை அரியின் சேனை ஆர்கலி ஆர்த்த ஓசை - அங்ஙனம் (அனுமான் கொணர்ந்த மருந்தால்) உயிர் பெற்றெழுந்த வானரசேனையாகிய கடல் ஆரவாரித்த ஓசை; மத்தன் மெய்மயங்க வந்து செவிதொறும் மடுத்தது - காமமயக்கம் கொண்ட அவ்விராவணன் உடல் தளருமாறு வந்து அவன் செவிகள் தோறும் நுழைந்தன.
அன்று, ஏ- அசைகள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While the king sat enthroned, watching the fair women,
- whose budding young smiles showed teeth one could not say were not pearls, come to such a state,
- the roar raised by the sea of the monkey army, risen up as it was,
- came and poured into every ear of the infatuated one, so that his body reeled.
What the poem says
Irāvaṇaṉ sits on his throne enjoying the spectacle of the drunken women.
Then the shout of the revived monkey army, loud as the sea, reaches all twenty of his ears. Drunk on pleasure as he is, the sound makes him reel.