கம்பராமாயணம் 8884 · யுத்த 24.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பவளவாயார் ஆடலும், அமிழ்தின் ஆன்ற பாடலும் - பவளம் போன்ற வாயினை உடைய பெண்களின் ஆடலும், அமுதினும் இனிதாய் அமைந்த அவர் பாடலும்; முழவின் தெய்வப்பாணியும் - அப்பாடலுக்கேற்ற மத்தளத்தின் தெய்வத்தன்மை வாய்ந்த ஓசையும்; களியின் வந்த அமலையும் - அவற்றைக் காண்போரின் களிப்பால் வந்த ஆரவாரமும்; ஊடலும், கடைக்கண் நோக்கும் - (அம்மகளிர் மீது ஆசை கொண்டு நோக்குவோர்க்கு அம்மகளிர் காட்டும்) ஊடலும், (அவ்வூடலால் அவ்வாடவர் வருத்தம் கண்டு இரங்கி அம்மகளிர்தம் இசைவைத் தெரிவிக்கும்) கடைக்கண் நோக்கமும்; மழலைவெவ் உரையும் எல்லாம் - அவ்வாடவரிடத்து அம்மகளிர் பேசும் காம வெப்பத்தை மிகுவிக்கும் மழலைத் தன்மையுடைய உரையும் ஆகிய அனைத்தும்; ஆர்ப்பு ஒலி வருதலோடும் வாடல் மென்மலரே ஒத்த - வானரர்தம் ஆரவாரப்பேரொலி வந்தவுடன் வாடிய மலர்போலப் பொலிவழிந்து போயின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The dancing, the uproar born of revelry, the singing richer than nectar,
- the divine beat of the drum, and the coral-lipped women's
- lovers' sulks, their sidelong glances, their hot lisping words, all of it,
- as soon as the roar came, became like soft flowers wilting.
What the poem says
The moment the monkeys' roar is heard, the whole party collapses. The dancing, the noisy merriment, the nectar-sweet songs and the drumbeat all stop.
So does the flirting: the women's pretended sulks, their inviting sidelong looks, their teasing words. Everything droops like a wilted flower.