கம்பராமாயணம் 8885 · யுத்த 24.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தறி பொருகளி நல்யானை சேவகம் தள்ளி ஏங்க - கட்டுத்தறியையும் முறிக்கின்ற மதக்களிப்பினையுடைய நல்ல யானைகள் தாம் படுத்த விடங்களில் திடுக்குற்று வருந்தவும்; துறுசுவல் புரவி தூங்கித் துணுக்குற, அரக்கர் உட்க - நெருங்கிய பிடரி மயிரினை உடைய குதிரைகள் துணுக்குற்றுச் சோரவும் காலாள் வீரராகிய அரக்கர்கள் அஞ்சவும்; எறிகடல் கடைந்த மேல்நாள் எழுந்தபேர் ஓசை என்ன - அலைகள் வீசுகின்ற பாற்கடலைக் கடைந்த முன்காலத்து எழுந்த பேரொலி போல, செறிகழல் இருவர் தெய்வச் சிலை ஒலி பிறந்தது - வீரக்கழல் அணிந்த இராமஇலக்குவரின் தெய்வத்தன்மை வாய்ந்த வில்லினின்றும் நாண் ஒலி பிறந்தது. அன்றே - அசை.
நால்வகைப் படையுள் தேர்ப்படை தனக்கென வீரம் உடையதன்று, “தானை, யானை குதிரையென்ற நோனார் உட்கு மூவகை நிலையும்” (தொல்-பொருள். புறத. 12) இதற்கு, “குதிரையானன்றித் தேர்தானே செல்லாமையின் தேர்க்கு மறம் இன்றென்று அது கூறாராயினர்” என்ற நச்சினார்க்கினியர் குறிப்பும் இங்கு காணத்தகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the fine elephants, wild enough to break their tethering posts, were startled in their stalls and moaned,
- the horses with thick manes drooped and shuddered, and the demons quailed,
- there rose the twang of the divine bows of the two with close-fitting anklets,
- like the great roar that arose in former days when the wave-tossed sea was churned.
What the poem says
The two brothers twang their bowstrings, and the sound is as loud as the roar that rose when the Milk Ocean was churned.
In Irāvaṇaṉ's city the war elephants start in their stalls, the horses tremble and the demon foot-soldiers are afraid. The commentary notes that chariots are left out because, by the old Tamil grammar Tolkāppiyam, a chariot has no courage of its own: it moves only because horses pull it.