கம்பராமாயணம் 8886 · யுத்த 24.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முழுக்கண் வேலால் குத்துவார் - இலக்கணம் முழுமையும் பெற்ற வேற்படைபோன்ற கண்களால் குத்துகின்றவர்களாகிய; முத்துவாள் முறுவல் மூரல் முகத்தியர் கூட்டம் எல்லாம் - முத்துக்களைப் போன்ற பற்களைக் காட்டி ஒளி பொருந்திய சிரிப்பினைச் சிந்துகின்ற நகைமுகத்தினை உடைய களியாட்டு மகளிர் கூட்டமெல்லாம்; வானரக்குழுவின் தோன்ற - இப்போதுவானரக்கூட்டம் போல (வெறுக்கத்தக்கனவாகத்) தோன்றவும்; மத்துவார்கடலின் உள்ளம் மறுகுற - மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பெற்ற கடலைப்போல உள்ளம் கலங்கவும்; வதனம் என்னும் பத்துவாள் மதிக்கும் - இராவணனது முகம் என்கின்ற பத்து ஒளி வாய்ந்த மதிகளுக்கும் அந்நாள் பகல் ஒத்தது இரவும் பைய- அந்நாள் இரவு (பொலிவழியச் செய்த) பண்பினால் பகலை ஒத்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The whole throng of women with faces lit by bright pearly smiles,
- who stab with their full spear-like eyes, now looked to him like a pack of monkeys;
- his heart was churned like the sea under the churning-stick;
- and for the ten bright moons called his faces, that night slowly became like day.
What the poem says
Irāvaṇaṉ's mood collapses. The beautiful women he was enjoying now look to him like a troop of monkeys, the enemy he dreads. His heart heaves like the ocean being churned.
His ten faces are compared to ten moons, and a moon loses its brightness by day. So for him this night becomes like daytime: all his glow is gone.