கம்பராமாயணம் 8888 · யுத்த 25.1

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மைந்தனும் மற்றுளோரும் மகோதரன் முதலோர் ஆய
தந்தித் தலைமையோரும், முதியரும், தழுவத் தக்க
மந்திரர் எவரும், வந்து, மருங்கு உறப் படர்ந்தார்; பட்ட
அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான்.

பொருள் · Meaning in Tamil

மைந்தனும், மற்றுளோரும் - இந்திரசித்தும், ஏனைய உறவினர்களும்; மகோதரன் முதலோர் ஆய தந்திரத் தலைமையோரும் முதியரும் - மகோதரன் முதலான சேனைத் தலைவர்களும், மூத்தோராக உள்ள பெரியோர்களும்; தழுவத்தக்க மந்திரர் எவரும் வந்து, மருங்கு உறப்படர்ந்தார் - ஏற்றுக் கொள்ளத்தக்க ஆலோசனையாளர் எவரும், மற்றவர்களும் வந்து தன் பக்கத்தில் நெருங்கிச் சேர்ந்தார்கள்; பட்ட அந்தரம் முழுதும் அனையவர்க்கு தானே அறியச் சொன்னான் - (அப்போதுதான்) பட்ட துன்பம் யாவற்றையும் அச்சபைக்கு வந்திருந்த அனைவருக்கும் தானே தெளிவாக எடுத்துச் சொன்னான். (இராவணன்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His son and the others, Makōtaraṉ and the rest who led the army,
  2. the elders, and every counsellor worth heeding
  3. came and gathered close at his side;
  4. and he himself told them all, so that they knew, the whole of the trouble that had befallen.

What the poem says

This verse opens the Canto of the Illusory Cītai. Irāvaṇaṉ calls a council. His son Intiracittu, the general Makōtaraṉ, the other commanders, the elders and his trusted advisers gather around him.

He tells them himself everything that has happened: the enemy army has been brought back to life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maintaṉum maṟṟuḷōrum makōtaraṉ mutalōr āya
tantirat talaimaiyōrum, mutiyarum, taḻuvat takka
mantirar evarum, vantu, maruṅku uṟap paṭarntār; paṭṭa
antaram muḻutum tāṉē aṉaiyavarkku aṟiyac coṉṉāṉ.