கம்பராமாயணம் 8891 · யுத்த 25.4

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நீரினைக் கடக்க வாங்கி, இலங்கையாய் நின்ற குன்றைப்
பாரினில் கிழிய வீசின், ஆருளர், பிழைக்கற் பாலார்?
போரினிப் பொருவது எங்கே? போயின அனுமன் பொன் மா
மேருவைக் கொணர்ந்து, இவ் ஊர் மேல் இடுமெனின், விலக்கல் ஆமோ?

பொருள் · Meaning in Tamil

இலங்கையாய் நின்ற குன்றை நீரினைக் கடக்க வாங்கி - இலங்கை நகராக நின்றுள்ள குன்றினை, அதனைச் சூழ்ந்துள்ள கடல் நீரினைக் கடக்குமாறு பறித்து எடுத்து; பாரினில் கிழிய வீசின் பிழைக்கற் பாலார், ஆர் உளர்? - பூமியின் மேல் கிழியுமாறு எறிவானாயின், உயிர் பிழைத்தற்குரியோர் இங்கு யார் உளர்? போர் இனிப்பொருவது எங்கே? போயின அனுமன் - (அனுமன் அங்ஙனம் செய்தால்) இனிய போர் செய்வது எங்கே? மருத்துமலையை வைத்துவிட்டு வரப் போயுள்ள அனுமன்; பொன்மா மேருவைக் கொணர்ந்து இவ் ஊர்மேல் விடும் எனின் விலக்கல் ஆமோ? - பொன்மயமான மேருமலையைக் கொண்டுவந்து இவ்விலங்கையின் மேல் போடுவானாயின் அதனைத் தடுக்கவியலுமோ?

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If he tore up the mountain that stands as Ilaṅkai, carried it clear of the water,
  2. and hurled it so that it smashed on the earth, who would there be left to survive?
  3. Where then would we fight a war? If Aṉumaṉ, who has gone,
  4. brought back great golden Mēru and dropped it on this city, could it be stopped?”

What the poem says

Māliyavāṉ spells out the danger. Aṉumaṉ could lift Ilaṅkai's mountain out of the sea and smash it on the ground, killing everyone, and there would be no war left to fight.

He is away now returning the medicine mountain. If he came back carrying Mount Mēru and dropped it on the city, no one could stop him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'nīriṉaik kaṭakka vāṅki, ilaṅkaiyāy niṉṟa kuṉṟaip
pāriṉil kiḻiya vīciṉ, ār uḷar, piḻaikkaṟpālār?
pōr iṉip poruvatu eṅkē? pōyiṉa aṉumaṉ poṉ mā
mēruvaik koṇarntu, iv ūrmēl viṭum eṉiṉ, vilakkal āmō?