கம்பராமாயணம் 8892 · யுத்த 25.5

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முறைகெட வேண்டின் முன்பு நினைந்ததே முடிப்பன், முன்பின்
குறை இலை குணங்கட்கு; என்னோ கோது இலா வேதம் கூறும்
இறைவர்கள் மூவர் என்பது? எண் இலார் எண்ணமே தான்;
அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா.

பொருள் · Meaning in Tamil

முறைகெட வென்ற வேண்டின் முன்னின் நினைந்ததே முடிப்பன் - அனுமன் முறைகெடச் செய்ய விரும்பினால் முன்பு நாம்நினைந்ததையே தன் வன்மை மிகுதியால் செய்து முடித்துவிடுவான்; குணங்கட்கு குறை இலை - ஆனால், குணங்கட்கு அவனிடத்துக் குறையில்லை; கோள் இலா வேதம் கூறும் இறைவர்கள் மூவர் என்பது என்னோ - குற்றமில்லாத வேதங்கள் சொல்லும் கடவுளர்கள்மூவரே என்பது என்ன? எண் இலார் எண்ணமே தான் - (ஆராய்ந்து பார்த்தால்) சிந்தனை இல்லாதவர்களின் எண்ணமே ஆம்! அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா! - ஒலிக்கின்ற வீரக்கழலை உடைய அனுமனோடு முதற்கடவுளர் நால்வரே ஆவார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If he wished to conquer by breaking the rules, he would carry out what we have just imagined; but in virtues
  2. he has no lack. Why then does the faultless Veda say
  3. that the lords are three? That is only the notion of the thoughtless:
  4. with Aṉumaṉ of the ringing anklets, the First Ones are four!”

What the poem says

Māliyavāṉ adds that Aṉumaṉ could easily do what they fear. Only his virtue stops him, since he will not fight unfairly.

He then makes a striking claim. The Vedas speak of three supreme gods, Brahmā, Viṣṇu and Śiva, but that is the view of people who have not thought it through. Counting Aṉumaṉ, there are four.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟai keṭa veṉṟu vēṇṭiṉ muṉpu niṉaintatē muṭippaṉ, muṉṉiṉ
kuṟai ilai kuṇaṅkaṭku; eṉṉō kōḷ ilā vētam kūṟum
iṟaivarkaḷ mūvar eṉpatu? eṇ ilār eṇṇamētāṉ;
aṟai kaḻal aṉumaṉōṭum nālvarē mutalvar ammā.