கம்பராமாயணம் 8893 · யுத்த 25.6

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இறந்தனர் இறந்து தீர; இனி ஒரு பிறவி வந்து
பிறந்தனம் ஆகி உள்ளேம்; உய்ந்தனம்; பிழைக்கும் பெற்றி
மறந்தனம்; எனினும், இன்னம் சனகியை மரபின் ஈந்து, அவ்
அறம்தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் ஐய

பொருள் · Meaning in Tamil

இறந்தவர் இறந்து தீர- (போரில்) இறந்தவர்கள் இறந்தவர்களே ஆக! உள்ளேம் இனி ஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் உய்ந்தனம் - இறவாது உள்ள நாம், புதியதொரு பிறவியில் வந்து பிறந்தனம் போன்று உய்ந்திருக்கின்றோம்; பிழைக்கும் பெற்றி மறந்தனம் - உயிர் பிழைத்து வாழும் தன்மையை இதுவரையில் மறந்திருந்தோம்; எனினும் ஐயா! இன்னம் சனகியை மரபின் ஈந்து - என்றாலும், இனியேனும் ஐயனே! சீதையை முறைப்படி கொடுத்துவிட்டு; அவ் அறம் தரு சிந்தையோரை அடைக்கலம் புகுதும் - அந்தத் தரும நெறி செல்லும் சிந்தையராகிய இராமலக்குவரை அடைக்கலம் புகுவோமாக.

இதுவரை நாம் உயிரோடிருப்பதே பெரிதென்பான் 'உள்ளேம் இனி ஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் உய்ந்தனம்' என்றான். இராம இலக்குவர் சீதையைக் கொடுத்துவிட்டால் இன்னும் நம்மை உயிர்கொண்டு பிழைக்க அனுமதிக்கும் அருளாளர்கள் என்பதனை 'அறம்தருசிந்தையோர்' என்பதனால் குறித்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Let the dead stay dead and be done with; we who remain
  2. have been saved as if born again into a new life; we forgot
  3. how to survive; but even now, sir, let us give back Caṉaki as is fitting
  4. and go for refuge to those whose minds bring forth dharma.”

What the poem says

Māliyavāṉ gives his advice. The dead cannot be saved, but those still alive have escaped as if born a second time. Until now they have ignored the way to survive.

It is still not too late. Irāvaṇaṉ should return Cītai, Caṉakaṉ's daughter, with due honour and ask for the protection of Irāmaṉ and Ilakkuvaṉ. Their minds are set on righteousness, so they will surely spare those who give in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṟantavar iṟantu tīra; iṉi oru piṟavi vantu
piṟantaṉam āki uḷḷēm; uyntaṉam; piḻaikkum peṟṟi
maṟantaṉam; eṉiṉum, iṉṉam caṉakiyai marapiṉ īntu, av
aṟam taru cintaiyōrai aṭaikkalam pukutum aiya