கம்பராமாயணம் 8894 · யுத்த 25.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறிகடல் குடித்து வானை மண்ணொடும் பறிக்க வல்ல - அலைகடல் நீரையெல்லாம் குடித்து விட்டு ஆகாயத்தை மண்ணுலகத்தோடும் சேர்த்துப் பெயர்த் தெடுக்கவல்ல; எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர் - எறிதற்கு உரிய ஆயுதங்களை உடைய அரக்கர்களெல்லாம் இறந்து பட்டனர்; இலங்கை ஊரும் சிறுவனும் நீயும் அல்லால் ஆர் உளர் ஒருவர்? தீர்ந்தார்? - இலங்கை என்கின்ற இந்த ஊரும் நின் சிறுவனாகிய இந்திரசித்தும் நீயும் அல்லாமல் வேறு ஒருவர் யார் உளர்? எல்லோரும் இறந்து பட்டனர்; “நம்வென்றி வெறிது” என்றான் மாலிமேல் விளைவது ஓர்வான்- (ஆகவே) 'நம் வெற்றி யெல்லாம் வெறுமையானதே' என்று கூறினான். மேலே விளையும் செயல் இத்தன்மைத்தாயிருக்கும் என்பதை உய்த்துணர்ந்த மாலியவான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The demons with their hurling weapons, who could drink up the rolling sea
- and tear up the sky together with the earth, are all dead; besides the city of Ilaṅkai,
- your son and you, who is there left? They are finished;
- our victory is an empty thing,” said Māli, who foresaw what was to come.
What the poem says
Māliyavāṉ ends his advice with a blunt reckoning. The mighty demon warriors, who could drink the ocean dry and tear the sky from the earth, are all dead.
Apart from the city itself, only Irāvaṇaṉ and his son Intiracittu are left. Any victory they think they have won is hollow. Māliyavāṉ, called Māli here, can see where this is heading.