கம்பராமாயணம் 8902 · யுத்த 25.15

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்னது நல்ல தேயால்; அமைதி 'என்று அரக்கன் சொன்னான்,
நல்மகன், 'உம்பி கூற, நண்ணலார் கண்டு நண்ணி,
முன்னிய வேள்வி முற்றா வகைசெரு முயல்வர் 'என்றான்;
'என், அவர் எய்தா வண்ணம் இயற்றலாம் உறுதி? 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

அன்னது நல்லதேயால்; ‘அமைதி’ என்று அரக்கன் சொன்னான் - (நீ கூறுகின்ற) அது நல்லதே; நிகும்பலையில் வேள்வி அமைத்துச் செய்க' என்று இராவணன் கூறினான்; நல்மகன், ‘உம்பிகூற, நண்ணலார் ஆண்டு நண்ணி - அது கேட்ட அவனது நல்லமகனாகிய இந்திரசித்து, உன் தம்பி வீடணன் இந்த இரகசியத்தைக் கூறக்கேட்டுப் பகைவர் அந்நிகும்பலையை அடைந்து; முன்னிய வேள்வி முற்றாவகை செரு முயல்வர்’ என்னா - நாம் கருதிய வேள்வி முற்றுப் பெறாதபடி போர்செய்ய முயல்வார்களே என்று கூறினான்; ‘அவர் எய்தா வண்ணம் இயற்றலாம் உறுதி என்?’ என்றான் - அவ்வாறு அப்பகைவர்கள் வராதபடி செய்யத்தக்க உபாயம் என்ன இராவணன் வினவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'That is good indeed; let it be prepared,' said the rākṣasa king.
  2. The good son replied, 'Your younger brother will tell them, and the foes will come there
  3. and strive in battle so that the sacrifice we intend is never completed';
  4. 'What sure means can we devise so that they cannot reach it?' he asked.

What the poem says

Intiracittaṉ, Irāvaṇaṉ's son, has proposed a secret sacrifice at the shrine of Nikumpalai that would make him invincible. Irāvaṇaṉ approves. But the son foresees a danger: Vīṭaṇaṉ, Irāvaṇaṉ's brother who has gone over to Irāmaṉ, knows the rite and will reveal it, and the enemy will rush in to break it up. He asks his father what can be done to keep them away.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉatu nallatēyāl; amaiti 'eṉṟu arakkaṉ coṉṉāṉ,
nal makaṉ, 'umpi kūṟa, naṇṇalār āṇṭu naṇṇi,
muṉṉiya vēḷvi muṟṟāvakai ceru muyalvar 'eṉṉā;
'eṉ, avar eytāvaṇṇam iyaṟṟalām uṟuti? 'eṉṟāṉ.