கம்பராமாயணம் 8904 · யுத்த 25.17

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"இத்தலைச் சீதை மாண்டாள்; பயன் இவண் இல்லை " என்பார்,
அத் தலை, தம்பிமாரும் தாயரும் அடுத்து உளோரும்,
உத்தம நகர் உளோரும் ஒழிவரென்று உள்ளத்து உள்ளி,
பொத்திய துன்பம் மூளச் சேனையும் தாமும் போவார்.

பொருள் · Meaning in Tamil

‘இத்தலைச் சீதை மாண்டாள், பயன் இவண் இல்லை’ என்பார் - ‘இவ்விடத்தில் சீதையோ மாண்டு போனாள்; இனி இங்கு நின்று (போர்செய்வதில்) பயன் இல்லை’ என்று கருதும் இராமஇலக்குவர்; அத்தலை தம்பிமாரும், தாயரும் அடுத்துளோரும் - அவ்விடத்துத் தம்பிமாரும், தாயரும், அடுத்துள்ள சுற்றத்தோரும்; உத்தம நகரும் மாளும் என்பது ஓர் வருத்தம் ஊன்ற - சிறந்த அயோத்தி நகரத்தில் உள்ள மக்களும் (இந்திரசித்தனால்) உயிர் ஒழிந்து போவார்கள்' என்பதாகிய பெருந்துன்பம் மனதில் ஆழ்ந்து பற்ற; பொத்திய துன்பம் மூள, சேனையும் தாமும் போவார் - அங்ஙனம் கலந்த துயரம் மேன்மேல் வளர்தலால் சேனையும் தாமும் அயோத்திக்குப்போய் விடுவார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Saying, "Here Cītai has died; there is no gain in staying,"
  2. and fearing that there the younger brothers, the mothers, the kinsfolk
  3. and the noble city itself will perish, a grief taking deep hold,
  4. with sorrow upon sorrow flaring up, they and their army will depart.'

What the poem says

Intiracittaṉ continues to predict the enemy's response. Once they believe Cītai is dead, Irāmaṉ and Ilakkuvaṉ will see no reason to keep fighting at Ilaṅkai. Fear for their brothers, their mothers, their kin and the people of Ayōttī will grip them, and with grief piled on grief they will take the army and hurry home, leaving him free to complete his sacrifice.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"it talaic cītai māṇṭāḷ; payaṉ ivaṇ illai" eṉpār,
at talai, tampimārum tāyarum aṭuttuḷōrum,
uttama nakarum māḷum eṉpatu ōr varuttam ūṉṟa,
pottiya tuṉpam mūḷac cēṉaiyum tāmum pōvār.