கம்பராமாயணம் 8906 · யுத்த 25.19

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

‘அன்னது புரிதல் நன்று’ என்று அரக்கனும் அமைய - ‘அந்தச் செயல் செய்தல் நல்லதே' என்று இராவணனும் உடன்பட; அம்சொல் பொன் உரு அமைக்கும் மாயம் இயற்றுவான் மைந்தன் போனான் - அழகிய சொல்லையுடைய சீதையின் உருவத்தை அமைக்கும் மாயத்தைச் செய்வதற்கு அவன் மகனான இந்திரசித்தும் போயினான்; இத்தலையது இன்னது ஆக இராமனுக்கு இரவி செம்மல் - இவ்விடத்து இத்தகைய செயல் நிகழ, இராமனுக்குக் கதிரவன் மகனான சுக்கிரீவன்; ‘தொல்நகர் அதனை வல்லைக் கடிகெடச் சுடுதும்’ என்றான் - பழமையான இலங்கை நகரை விரைவாக அதன் சிறப்புக்கெடுமாறு எரிப்போம் என்று கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Doing that is good,' the rākṣasa agreed, and so
  2. the son went off to work the magic that would shape the golden form of the sweet-voiced lady.
  3. While this was happening on this side, the noble son of the Sun said to Irāmaṉ,
  4. 'Let us swiftly burn that ancient city and ruin its guard.'

What the poem says

Irāvaṇaṉ approves, and Intiracittaṉ goes to create the phantom Cītai, 'the golden form with the lovely speech'. The scene then shifts to Irāmaṉ's camp, where Cukkirīvaṉ, the monkey king and son of the Sun god, proposes setting fire to Ilaṅkai to destroy its defences.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉatu purital naṉṟu eṉṟu arakkaṉum amaiya, am col
poṉ uru amaikkum māyam iyaṟṟuvāṉ maintaṉ pōṉāṉ;
iṉṉatu it talaiyatu āka, irāmaṉukku, iravi cemmal,
'tol nakar ataṉai vallaik kaṭi keṭac cuṭutum 'eṉṟāṉ.