கம்பராமாயணம் 8908 · யுத்த 25.21

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எண்ணின கோடிப் பல்படை யாவும்
மண்ணுறு காவல் திண்மதில் வாயில்
வெண்நிற மேகம் மின்னினம் வீசி
நண்ணினபோல தொல்நகர் நண்ணி.

பொருள் · Meaning in Tamil

எண்ணின கோடிப் பல்படையாவும் - எழுபது வெள்ளம் என்று கணக்கிடப் பட்ட கோடிக்கணக்கான வானரப்படைகள் யாவும்; மண்ணுறு காவல் திண்மதில் வாயில் - அழகு செய்யப்பெற்றதும், காவலை உடையதுமாகிய திண்மையான மதிலின் வாயில் வழியாக; வெண்நிற மேகம் மின் இனம் வீசி - வெண்மையான நிறத்தை உடைய மேகங்கள் மின்னல்களை வீசிக் கொண்டு; தொல் நகர் நாண நண்ணின போல்வ - பழைமையான அந்த இலங்கை நகர் நாணும்படி நெருங்கின போல்வனவாயின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the many armies, counted in crores,
  2. at the gates of the strong, adorned and guarded walls,
  3. looked like white clouds flinging out swarms of lightning
  4. as they pressed close, putting the ancient city to shame.

What the poem says

The monkey armies crowd in at the gates of Ilaṅkai's ornamented, well-guarded walls, each holding a firebrand. The poet sees them as white clouds pressing in and hurling lightning, an image that shames the proud old city.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇṇiṉa kōṭip pal paṭai yāvum
maṇṇuṟu kāval tiṇ matil vāyil
veṇ niṟa mēkam miṉ iṉam vīci
naṇṇiṉa pōlva tol nakar nāṇa.