கம்பராமாயணம் 8909 · யுத்த 25.22

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆசைகள் தோறும் அள்ளின கொள்ளி
மாசு அறு தானை மர்க்கட வெள்ளம்
'நாசம் இவ்வூருக்கு உண்டு’என நள்ளின்
வீசின வானின் மீன்விழல் அன்ன.

பொருள் · Meaning in Tamil

மாசு அறுதானை மர்க்கடவெள்ளம் - குற்றம் அற்ற சேனையாகிய வானர வெள்ளம்; ஆசைகள் தோறும் கொள்ளி அள்ளின - திசைகள் தோறும் கொள்ளிக்கட்டைகளை அள்ளி; இவ் ஊருக்கு நாசம் உண்டு என - இவ்வூருக்கு அழிவு உண்டு என்று குறிக்க; வானின் மீன் விழும் என்ன நள்ளின் வீசின - வானத்திலிருந்து மீன்கள் விழுகின்றன என்னும் படியாக நள்ளிரவில் (அக்கொள்ளிகளை) வீசின.

வானிலிருந்து விண்மீன் விழுதல் அரசுக்கு அழிவு எனும் நம்பிக்கை இங்கு குறிக்கப்பட்டதெனினும் அமையும். உற்பாதம் போல அமைந்தது என்று தற்குறிப்பேற்ற உவமையாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Scooping up firebrands toward every quarter,
  2. the flood of monkeys, a faultless army,
  3. as if to say 'ruin awaits this city,' in the middle of the night
  4. hurled them, like stars falling from the sky.

What the poem says

At midnight the monkeys fling their torches into the city from every side. The burning brands look like stars falling from the sky, which in Indian belief is an omen of a kingdom's fall. The poet presents the sight as though it were such an omen announcing Ilaṅkai's destruction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ācaikaḷtōṟum aḷḷiṉa koḷḷi
mācu aṟu tāṉai markkaṭa veḷḷam
'nācam iv ūrukku uṇṭu’ eṉa naḷḷiṉ
vīciṉa vāṉiṉ mīṉ viḻum eṉṉa.